Ticker

6/recent/ticker-posts

why you feared out being as Ascetic, Monk?

துறவு என்ற வார்த்தையை கேட்டாலே பயந்து ஓடுவதற்கு என்ன காரணம்?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம்.

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.

அன்பர்களே, துறவு என்ற வார்த்தையை கேட்டாலே பயந்து ஓடுவதற்கு என்ன காரணம்?

துறவு என்பதை மிகைப்படுத்தி பயமுறுத்தி விட்டனர் 68% (சரியான /அதிக வாக்கு)

ஏறக்குறைய மிகச்சரியான தேர்வு, இவர்கள் எல்லோருமே வேதாத்திரிய அன்பர்களாக இருப்பார்கள் என்றே கருத இடமிருக்கிறது. ஆனால் பொதுமனிதரிடம் கேட்டால், ‘ஐய்யோ ஆளைவிடங்க சாமி’ என்று இடத்தை காலி செய்துவிடுவார் என்பதே உண்மை.

இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், துறவு என்று நினைத்த உடனே, அச்சொல்லை கேட்ட உடனே, உலகையும், வாழ்க்கையையும், தன்னையும், பிறரையும், உலக பொருட்களையும், உணவையும் கூட வெறுத்து ஒதுக்குதல் என்ற நிலைப்பாடு என்றெ எல்லோரும் கருதுகின்றனர். அதனால்தான் 1) வாழ்க்கையை வெறுத்து ஒதுங்கிட வேண்டும் என்பதால் 2) எல்லோரையும் ஒதுக்கி காட்டிற்குள் வாழவேண்டுமே 3) இறைவனே துணையாக எல்லாவற்றையும் ஒதுக்கனுமே 4) எதையும் ரசித்து ருசித்து அனுபவித்து வாழமுடியாதே என்றெல்லாம் கவலையாக மலர்கின்றது.

உண்மை என்ன? ‘எதையும் அளவோடும் முறையோடும் பயன்படுத்த தெரிந்து கொண்டால் அதுதான் துறவு. உறவிலே கண்ட உண்மை நிலைத் தெளிவே துறவு’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார்.

ஆனால், மக்களுக்கு துறவு என்றாலே ஏன் இந்த குழப்பம்? மக்களின் மனதை, அறிவை, அவர்களையும் கூட, தங்கள் வசமே வைத்துக்கொள்ள சிலர் விரும்புகிறார்கள் என்று கருத இடமிருக்கிறது. உங்களுக்கு இனியும் குழப்பம் வேண்டாம். துறவு என்றால் இதுதான் என்று பிறரிடமும் சொல்லி விளக்கமளிப்பீர்.

வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments