வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம்.
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
அன்பர்களே, எப்படிவேண்டுமானலும் வாழலாம் என்ற கருத்து நல்லதுதானா?
இயற்கையின் ஒழுங்குபோல் மனிதனுக்கும் உண்டு 73% (சரியான / அதிக வாக்கு)
உண்மையிலே நம் வேதாத்திரிய சானல் அன்பர்கள், புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்து மகிழ்கிறோம். அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த நவீன, அணுவியல் விஞ்ஞான / அறிவியல் காலத்தில், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கருத்து மேலோங்கி இருக்கிறது. இளையதலைமுறை ஆணுக்கும் பெண்ணுக்கும் கூட இக்கருத்து எப்படியோ தெரியவந்து, அப்படியே வாழவும் முற்படுகிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், பிறந்துவிட்டோம், எப்படியாவது நன்றாக, இன்பத்தை மட்டுமே அனுபவித்து வாழ வேண்டும். அதிக பணம் வேண்டும், அதை எப்படியாவது ‘பிரபஞ்சத்திடம் கேட்டு’ பெற்றுவிட வேண்டும். அதோடு உலகில் எப்படி வேண்டுமானலும் வாழலாம். ஏனென்றால் எல்லோரும் சாகத்தானே போகிறோம்? அப்புறம் என்ன? என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையா? இல்லையா என்று உங்களைவிடவும், உங்கள் குழந்தையிடம் கேட்டால் தெரியும்.
மனிதன், மனம்+இதன் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. அப்படியான மனிதன், தனியாக உருவாகிவிடவில்லை. யாரும் உருவாக்கியும் விட்டு விடவில்லை. இந்த இயற்கையின் பரிணமத்தில் ஒன்றாக உருவாகி, மாற்றம் பெற்று மனிதனாக மலர்ந்திருக்கிறான். இயற்கையில் உள்ள எப்பொருளுக்கும் ஓர் ஒழுங்கு உண்டு. இதை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்று கூட சொல்லலாம். ஆனாலும் ஒரு மனிதன் எந்த அளவுக்கும் செல்லமுடியும். அதாவது தன்னையே தான் அழித்துக்கொள்கின்ற அளவுக்கும் கூட. அந்த அளவிற்கு இயற்கை, முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளது. ஆனால் நம்மை அழித்துக்கொள்வது நம் நோக்கம் இல்லையே. நிறைவாக, இன்பமாக, அமைதியாக வாழ்வது தானே?
அதற்கு இந்த இயற்கையின் ஒழுங்கோடு, அதை புரிந்துகொண்டு வாழ்வதுதான் சரியான முறையும், வழியும் ஆகும். எப்படி புரிந்து கொள்வது? தன்னை, நான் யார்? என்ற கேள்வியோடு அணுக வேண்டும். யோகத்தில் இணைந்து கொள்ளவிட்டாலும் கூட, நான் யார்? என்ற சிந்தனையை ஏற்று புரிந்து கொண்டால் உண்மை புரியும்.
வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments