வணக்கம் அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 369 votes.
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
யோகத்தில் கூட, அதிக படித்தவரும், நிறைய பட்டங்கள் வாங்கியவரும், நன்றாக பேசுபவரும், போற்றப்படுவரும்தான் சிறந்தவர் என்ற கருத்து சரியா?
இல்லை, தவத்திலும் ஆராய்ச்சியிலும் உயர்ந்தவர் தேவை 66% (சரியான/ அதிக வாக்கு)
ஏதோ ஒருவகையில் புரிந்து கொண்டவர்கள்தான் இந்த பதிலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இல்லையென்றால்,
1) ஆமாம், அவர்தான் நம்மையும் உயர்த்த முடியும். 2) எந்த அளவுக்கு புகழ்வாய்ந்தவர் என்பது முக்கியம் 3) இறை தத்துவத்தை எளிதாக சொல்லத்தெரிந்தவர் தான் 4) ஓரளவு உண்மைதான் அவருக்கு அனுபவமும் வேண்டும் என்ற இதில் ஒன்று மேலே வந்திருக்கும்.
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், படித்தவன் தான் அறிவாளி, மற்றவன் முட்டாள் என்ற கருத்து இன்னமும் மேலோங்கி இருக்கிறது. எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பது ஔவையின் வாக்கு. எனவே அந்தக்காலம் முதல் தமிழர்கள் மரபில் எண்ணும் எழுத்தும் எல்லோருக்கும் இயல்பு என்று சொல்லப்பட்டு உள்ளது. அக்காலம் முதல் இக்காலம் வரை யோகத்தில் ஈடுபடவும், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கும், இறையுணர்வு பெறவும் படிப்போ, சான்றிதழோ, பட்டயமோ தேவையில்லை. ஒரு குருவிடம் சரணடைந்தால் போதும்.
இப்போது நவீன விஞ்ஞான / அறிவியல் காலமாகிவிட்டது. அதனால் மக்களுக்கு, படிப்புதான் எல்லாம் என்று தோன்றிவிட்டது. தன்னுடைய குருவுக்கே படிப்போ, சான்றிதழோ, பட்டயமோ தேவை. அவர் வழியே கற்றவருக்கும் தேவை. இது இல்லையென்றால் அவர் பொய்யர் என்ற கருத்து மேலோங்கிவிட்டது. இப்படியானவர்கள், அவர்களுக்குத் தகுந்த குருவிடம் சேர்ந்து நன்றாக ஏமாந்து, வாழ்விலும் ஏமாற்றம் பெற்று வாழ்வை இழப்பார்கள்.
நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘அறிவேதான் தெய்வம்’ விளக்கமாக கூறியுள்ளார். அந்த அறிவு படிப்போ, சான்றிதழோ, பட்டயமோ பெற்ற அறிவில்லை. தன்னைத்தானே யூகித்து, தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்று உயிரற்ற அசையா பொருட்களிலும் கூட அறிவாக உள்ளதே? அதற்கு என்ன சொல்லுவார்கள்? என்னிடம் படிப்போ, சான்றிதழோ, பட்டயமோ காட்டு என்பார்களோ?
சொல்லும் வார்த்தை / விளக்கத்தை தன்னறிவில் தேடி கண்டடைவதே உண்மை. அதுதான் சிறப்பான வழி. வார்த்தையாலும், சொல்லாலும், செயலாலும், அதை விளக்கிட முடியாது. தேர்ந்த படிப்போ, சான்றிதழோ, பட்டயமோ இன்னும் என்னென்ற இருக்கிறதோ அது எல்லாம் ஒருவருக்கு, ஊக்கம் தருவதற்காக மட்டுமே, இறை உண்மையை சொல்லுவதற்கு அது, ஒரு தகுதியும் இல்லை.
வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments