வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 432votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, முன்பின் அறியாத இடங்களில் தவம் செய்யக்கூடாது என்பது ஏன்?
மன அமைதி கிடைக்காது, குழப்பம் ஆகும் 82% (சரியான / அதிக வாக்கு)
-
அதிகபட்ச அன்பர்கள் கலந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி. உடற்பயிற்சியையும், யோகத்தையும் தனியே பிரித்தறியாதவர்கள், நம்மோடு நிறைய இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை, தவம் என்பது மனதிற்கான பயிற்சி என்றுதான் சொல்லுவார்கள். மேற்கத்திய நாட்டு தத்துவ ஞானிகளும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால், சித்தர்களின் யோகம், தவம் என்பதின் உண்மை அவர்களுக்கு எப்படி தெரியும்? வேதாத்திரிய யோகமும் அவர்களுக்கு புரியுமா?
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! நாம், வேதாத்திரியத்தில் கற்றுக்கொள்வது, எளியமுறை குண்டலினி யோகம். எனவே இது சாதாரண யோக பயிற்சி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. 15 நாட்களுக்குள்ளாக தீட்சை பெற்று அடிப்படை நிலை உயர்வுக்கு வந்த ஒருவரும், நன்கு தவம் கற்றவரும் கூட முன்பின் அறியாத இடங்களில் தவம் செய்யக்கூடாது. ஏன்?
இதற்கு சரியான தேர்வை பார்த்தோம் எனினும், 1) அங்கிருக்கும் வான்காந்தம் நிலை தெரியாது 2) ஏதேனும் கெடுதல் நேர்ந்துவிடுமே அதனால் 3 ) இனம்புரியாத பயம் வந்துவிடும் அதனால், என்பதாகவும் சொல்ல முடியும். முன்பின் அறியாத இடங்கள், பலரும் வந்துபோகிற இடமாக இருக்கலாம், யாருமே வந்து போக முடியாத இடமாகவும் இருக்கலாம். எனினும், அந்த இடம் ‘தூய்மையானதாக’ இருக்காது.
நாம் தவம் ஆரம்பிக்கும் பொழுது, இடத்தூய்மையும், மனதூய்மையும் சங்கற்பம் செய்து கொள்கிறோம் என்றாலும் கூட, முன்பின் அறியாத இடங்களில், முழுமை கிடைக்காது. தவம் சிறக்காது. ஓர் உதாரணமாக சொல்லுவதென்றால், நீங்கள் உங்களுடைய வீட்டு வாசலில் இருக்கும் குப்பையை உடனே தூய்மை செய்துவிடலாம். ஆனால் பலநாட்கள் பூட்டிக்கிடந்த வீட்டின் வாசலை, உடனடியாக தூய்மை செய்துவிட முடியுமா? முடியாதுதானே?!
சரி, ஆவிகள் ஆன்மாக்கள் தொந்தரவு இருக்குமா? என்று சொல்லவில்லையே? இருக்குமா, இல்லையா என்ற விளக்கத்தை தனிப்பதிவாக தர நினைக்கிறேன். எனவே காத்திருங்கள்!
வாழ்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments