வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 296votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
அன்பர்களே, எண்ணங்கள் வழியாகவே நாம் செயல்படுகிறோம் என்று நினைக்கிறீர்களா?
ஆம் அப்படித்தான் பெரும்பாலும் நிகழ்கிறது 82% (சரியான / அதிக வாக்கு)
பெரும்பான்மையான வாக்கு அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் எண்ணங்கள் வழியாகவே செயல்படுகிறோம். ஆனால் இந்த உண்மையை நாம் உணர்வதில்லை. ஏதோ நாம் தனியாக, விரும்பியும், நினைத்தும் செய்படுவதாக நம்புகிறோம். அதற்கு காரணம், எண்ணங்கள் குறித்த உண்மையை நாம் அறியாததே ஆகும்!
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! நாமும், நம்மோடு வாழும் பலரும், எண்ணம் குறித்து அறிந்துதான் வாழ்கிறோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ‘எண்ணமே வாழ்வு’ ‘எண்ணம் போல் வாழ்க்கை’ ‘எண்ணத்தைப்போல மனசு’ என்றெல்லாம் நமக்குள் பேசிக்கொள்வது உண்டுதானே. கிராமத்தில் இருப்பவரும், நகரில் வசிப்பவரும் வித்தியாசமின்றி சொல்லிக் கொள்வார்கள். கூடுதலாக நகர வாசிகளுக்கு, எண்ணங்கள் குறித்த தத்துவ விளக்கங்களும், கல்விப்பாடமும், நூல்களும், கட்டுரைகளும் நிறைய உண்டு. ஆனால் உண்மையை அப்படியே தருகிறதா? என்றால் இல்லை.
எண்ணங்கள் குறித்து, வேதாத்திரி மகரிஷி ‘முழுமையாக’ விளக்கம் அளித்துள்ளார். மனிதர்களாகிய நாம், எண்ணங்களின் தொகுப்பை ஏற்கனவே வைத்திருக்கிறோம். எங்கே? கருமையத்திலும், மனதின் ஆழ்நிலையிலும். எனவே மனம் உணருகின்ற, மனத்தால் உணருகின்ற சூழலுக்கும் அறிவுக்கும் சிந்தனைக்கும் ஏற்ப அவை எழுகின்றன. ஓவ்வொருவரின் சொல்லுக்கும், செயலுக்கும் முன்னோடியாக, அவர்களின் எண்ணமே ‘மூலமாக’ இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். அதை அறியாதோர் 1) இல்லை எண்ணிதான் செயல்படுகிறோம் 2) திட்டமிட்டு எண்ணி தீர்வாக செயல்படுகிறேன் 3) என் செயலுக்கும் எண்ணத்திற்கும் தொடர்பில்லை என்றுதான் சொல்லுவார்கள்.
காத்திருங்கள் மேலும், எண்ணங்கள் குறித்து அறிவோம்.
தினம் ஒரு கவிதையாக படிக்க: இங்கே படிக்கலாம்
வாழ்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments