வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 400votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, ஒவ்வொரு தவத்தின் முடிவிலும், கைகளால் உடலை தேய்த்துக்கொள்வது ஏன்?
கைகளில் தேங்கி இருந்த ஜீவகாந்தம் பரப்ப 87% (சரியான / அதிக வாக்கு)
-
நாம் இந்த உலகில் பல்வேறு தவமுறைகளைக் கண்டுள்ளோம். ஓவ்வொரு குழு, அமைப்பு தனித்தனியான வழிமுறைகள் அமைத்திருக்கின்றன. மேலைநாடுகளிலும், கிழக்குநாடுகளிலும் ஒரு மன அமைதி பயிற்சியாகவே செய்யப்படுகின்றன. நம் வேதாத்திரியத்தில், சித்தர்கள் வழியில், எளிமைப்படுத்தப்பட்ட வகையில், நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி வடிவமைத்திருக்கிறார். மிக முக்கியமாக, ‘ஜீவகாந்தம்’ என்ற ஒரு உன்னதமான ஆற்றலை, விளக்கமாக சொன்னவரும் இவரே ஆகும்.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! இந்த ஜீவகாந்தம், நம் உயிரின் தன்மாற்றமாக உடலெங்கும் ஆற்றலாக ஓடிக்கொண்டே இருக்கும். அதுதான் அதன் இயல்பு. நாம் வேதாத்திரிய தவத்தில் குறைந்தது 10 நிமிடம் முதல் அதிகபட்சமாக 40 நிமிடம் வரை அமர்ந்து இருக்கிறோம். இதனால், நம் உடலுக்குள்ளே ஓடும் ஜீவகாந்தம் சில மாற்றத்திற்கு உள்ளாகிறது. கைகளை கோர்த்து இருப்பதால் தடை இல்லாமல் சுழன்று ஓடவும் செய்கிறது எனினும். கைகளில் தேக்கமும் ஆகிறது. தேக்கமான ஜீவகாந்த ஆற்றலை, மீண்டும் ஊக்குவிக்கவும், அதை உடல் முழுவதும் மீண்டும் தூண்டிடவும், கைகளை தேய்த்து உடல் முழுவதும் தேய்த்துக்கொள்கிறோம். இது நாம் தவ முடிவில், உறுதியாக செய்யவேண்டிய ஒரு வழக்கமாகும்.
ஒருவேளை, இதை செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? உடனடியாக ஒன்றும் ஆகாது, ஆனால் நாளடைவில், தவம் செய்து முடித்தவருக்கு, கை கால்களில் உணர்வில்லாமல், மரத்து போனது போன்ற உணர்வு உண்டாகும். உடனடியாக எழ முடியாது தடுமாற்றம் வந்துவிடும். அந்த நிலைக்கு செல்லக்கூடாது என்பதால், முன்னதாகவே அதை தவிர்க்கவும், நன்மை விளைவிக்கவுமே, தவமுடிவில் நாம் கைகளை தேய்த்து, உடல் முழுவதும் தேய்த்துக் கொள்கிறோம். சந்தேகம் எழுந்தால், இதை நீங்களே பரிசோதித்துப் பார்த்து அதன் விளக்கமும் காணலாம்!
வாழ்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments