Ticker

6/recent/ticker-posts

Relaxation on simplified exercise in Vethathiriyam

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில், உடலை தளர்த்துதல்


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 346 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில், உடலை தளர்த்துதல் பலன்கள் என்ன?

உடலும் மனமும் அமைதி நிலைக்கு வருகிறது 70% (சரியான / அதிக வாக்கு)

-

உடல்பயிற்சி, ஆசனம், பிராணாயமம், அக்குபிரஷர், உடல் நலம், மன நலம், உறுப்புக்கள் நலம் என்ற வகையில் எல்லாம் கலந்த ஒரு பயிற்சி முறையே, அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி தந்த, எளிய முறை உடற்பயிற்சி ஆகும். இதன் பலன்களை தொடர்ந்து செய்துவரும் ஒருவர், சில நாட்களிலேயே உணரமுடியும். இந்த பயிற்சியில், முடிக்கும் முன்பு, உடலை தளத்துதல் செய்கிறோம்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! கிட்டதட்ட 45 நிமிடங்களுக்குள் எளிய முறை உடற்பயிற்சி செய்து முடித்துவிடலாம். அவரவர் உடல் தன்மையை பொறுத்து மெதுவாக செய்வதில் தவறில்லை. உடல் தளர்த்துதல் என்பது முடிக்கும் முன்பு செய்யும் பயிற்சி ஆகும். ஏன்? 

இதுவரை நாம் செய்த, உடல்பயிற்சியால், தூண்டப்பட்ட, உடல், உடல் உறுப்புக்கள், எலும்புகள், நரம்புகள், தசை, சதை ஆகியவற்றிக்கு முழு ஓய்வு அளிக்கிறோம். அதாவது ஏறக்குறைய தூங்குவது போல ஆனால் நினைவில் நிற்பது முக்கியமாக செய்ய வேண்டும். ஆனால், சிலர் உண்மையாக தூங்கியும் விடுவதை காணலாம். அந்த அளவிற்கு ‘உடல் தளர்த்தல்’ பயிற்சி, உடலும் மனமும் அமைதி நிலைக்கு வர துணை செய்கிறது.

பெரும்பாலும், நிறைய அன்பர்கள் செய்வதில்லை என்றும் அறிகிறோம். அவர்களை பொறுத்தவரை கை, கால்களை அசைப்பதுதான் பயிற்சி என்று நினைக்கிறார்கள். உடலுக்கு மனதிற்கு அமைதி கொடுப்பதும் ஓர் பயிற்சியே!

இனிவரும் நாட்களில், உடல் தளர்த்துதல் செய்ய மறவாதீர். இதற்கு நேரம் கணக்கும், கட்டாயமும் இல்லை. நீங்களாகவே, பாதம் முதல் தலை உச்சி வரை எல்லா உறுப்புக்களையும் நினைவில் கொண்டுவந்து முடிக்கலாம்!

உடல்நலம், மன வளம் பெற வாழ்த்துகிறோம்!

வாழ்க வளமுடன்!

-

Thanks to: Images copyrighted to original owner or websites, here we used educational purpose only.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments