Ticker

6/recent/ticker-posts

Why we need kundalini yoga on this materialistic world too?

 பரபரப்பாக வாழுகின்ற இந்த பொருளாதர உலகில், இறை தேடிக்கண்டடைவது தேவைதானா? என்ற கேள்வி எழுகிறதா?

வணக்கம் அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா?! அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம், இதில் கலந்துகொண்டோர் / வாக்கு மொத்த எண்ணிக்கை Voters206/16Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)


அன்பர்களே, பரபரப்பாக வாழுகின்ற இந்த பொருளாதர உலகில், இறை தேடிக்கண்டடைவது தேவைதானா? என்ற கேள்வி எழுகிறதா?

உலகில் பிறந்ததே தன்னையறியவும் இறையுணரவுமே 75% (சரியான / அதிக வாக்கு)

இன்பமாக வாழ்வே விரும்புகிறோம் அதற்கு வழி இறை உண்மையே! (சிறப்பு வாக்கு)


அன்பர்களே, யோகம் என்ற சொல் பெரும்பாலான மக்களுக்கு கசப்புக்காய் எனலாம். ‘நன்றாக வாழ்வதை விட்டுவிட்டு ஏன் யோகத்திற்கு போய் துன்பப்படனும்? அதெல்லாம் வயசான காலத்துல பார்த்துக்கலாமே? என்றுதான் சொல்லுவார்கள். காரணம், ஏதோ பிறந்துவிட்டோம், எல்லாம் அனுபவித்து வாழ்ந்துவிடலாம் என்ற ஒரு கருத்தே ஆகும்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

அந்தக்காலம் முதல், இந்தக்காலம் வரையும் யோகம், யாரோ ஒரு சிலருக்கு, அதற்கெனவே பிறந்தவருக்கு, அப்படியான கிரக அமைப்பு இருப்பவர்களுக்கு, சராசரி வாழ்வை வெறுத்தவருக்கு மட்டுமே என்ற நிலைபாடு இருந்துவருகிறது. அதற்கு உண்மையை உணராத மேலோட்டமான, தெளிவற்ற பார்வையே காரணம்.

இதனால், பிறப்பு ஏன் நிகழ்கிறது? என்ற கேள்விக்கான பதில் தேடாது இருப்பதும், வாழும் நாம் செய்யவேண்டியது என்ன? என்ற உண்மைக்கான ஆராய்ச்சி இல்லாமையும் காரணமாகிறது. எனவே வழக்கமாக சுகம், இன்பம், பணம், பொருள், புகழ், செல்வாக்கு தேடி அதற்காகவே, வாழ்நாளை இழப்பதும் தொடர்ந்து நிகழ்கிறது. பிறப்பின் காரணமே, கர்மா என்ற வினைப்பதிவின் முடிந்துவிடாத நிலைதான் என்பதையும், அதை இப்பிறப்பிலாவது தீர்க்க வேண்டும் என்ற தெளிவான எண்ணம் மனிதர்களிடம் இல்லை. 

ஆனாலும் யாரோ சிலர், தானாக தனக்குள் ஆர்வம் கொண்டு யோகத்தில் இணைந்து உயர்கிறார்கள். இன்றைய நாளில், விஞ்ஞானத்தைப்போலவே, மெய்ஞானமும் எளிமையாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அக்காலம் போல ஏன் கஷ்டப்படவேண்டும்? என்றே நினைக்கின்றனர். இதனால் யோகமே தேவையில்ல்லை என்று, இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவுகளை கூட்டி, அதை தன் வாரிசுகளுக்கும் தந்து, வழக்கம்ப்போல வாழ்ந்து இறந்துவிடுகின்றனர்.

கண்களை திறந்து வைத்துக்கொண்டே, பாழும் கிணற்றில் விழுவதற்கு சமமாக சொல்லலாம். இத்தகைய தவறான மனப்போக்கு இனியாவது மாறிட வேண்டும். உண்மையாகவே, எது முழுமையான, நிறைவான, இயற்கையான இன்பமும், அதை அனுபவித்து மகிழும் வாழ்வும், இறையுணர்வு பெற்று, தன்னையறிதலில் மட்டுமே கிடைக்கும். அதற்கான சிறந்த வழியே, யோகம் ஆகும். 

வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Paytm:9442783450@paytm

Present by:

Post a Comment

0 Comments