கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்களின் அலைவீச்சில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறீர்களா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 202Votes/13Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்களின் அலைவீச்சில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறீர்களா?
தப்பிக்க முடியாது ஆனால் ஏற்று சாதகமாக்கிட முடியும் 76% (சரியான / அதிக வாக்கு)
அந்த அலைவீச்சின் தாக்கத்தை குறைத்திட வழி உண்டு 13% (சிறப்பு வாக்கு)
அன்பர்களே, நாம் வாழும் இந்த புவியும் ஒரு கோள்தான் என்பதை என்றும் நாம் மறந்துவிடுவதில்லை. அதுப்போலவே, சூரியன் என்ற பெரிய நட்சத்திரம், பகல்பொழுதுகளில் ஒளிவீசுவதையும், இரவுகளில் நிலவு எனும் கோள் ஒளி வீசுவதையும் அனுபவிக்கிறோம். அப்படியாக இந்த பிரபஞ்சம் முழுவதும் கோள்களும், நட்சத்திரங்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்தும் ஒளி வருகின்றன. ஆனால் நாம் அறியமுடிவதில்லை.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
ஒரு கிரகம் / கோளின் ஒளி என்பதே அலைதான் என்று, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். உதாரணமாக, சூரியனில் இருந்து வருவது அலை மட்டுமே, அந்த அலைகள் நாம் வாழும், இந்த பூமியின் வளி மண்டல அடுக்குகளில் நுழையும் பொழுது, ஒளியாக மாற்றம் பெறுகிறது. நாம் அந்த ஒளியோடு, வெப்பமாகவும் உணர்கின்றோம். மேலும் இந்த அலைகளை, அதற்கான கருவிகள் கொண்டு, வாழ்வில் பயன்படுத்தியும் வருகிறோம் என்பது உண்மைதானே?!
இந்த உண்மையை அறிந்தவர்களும், சோதிடம் என்பதை நம்புவதில்லை. ஜாதகம் என்ற குறிப்பில் அமைவதையும் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களுடைய வாதம் என்ன என்றால், எந்த ஒரு தனிமனிதனையும், அந்த அலைகள் எதுவும் செய்துவிடமுடியாது என்பதுதான். இந்த வாதம் ஏன் வருகிறது? ஜாதகத்தைப் பார்த்து மனிதனின் மனதையும், வாழ்வையும் முடமாக்கும் சில அற்ப ஜோதிடர்களின் கருத்தால் தான் என்பதையும் நாம் அறியமுடியும்.
ஆனால், கிரகங்கள் / கோள்கள் / நட்சத்திரங்கள் என்பது உண்மை, அதன் அலைகளும் உண்மைதானே?! அதில் எந்த சந்தேகமும் இல்லையே! எனவே கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்களின் அலைவீச்சில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறீர்களா? என்று கேட்டால், தப்பிக்க முடியாது ஆனால் ஏற்று சாதகமாக்கிட முடியும் என்பதுதான் உண்மை. அதை நாம் புரிந்து கொள்ளவும், செயல்படுத்திடவும் ‘மனவளக்கலை யோகம்’ உதவுகிறது என்று சொல்லலாம்!
சோதிட உண்மைகள், ஜாதக குறிப்பு, அலைகள், தூண்டுதல் என்பன குறித்து, இனிவரும் நாட்களில் நாம் பதிவாக காணலாம். காத்திருங்கள். வேதாத்திரிய யோகவழி காணொளி தளத்தில் என்றும் இணைந்திருங்கள்!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments