Ticker

6/recent/ticker-posts

Do you know why you are not sitting with padmasana on yoga practice?

தவ நேரம் முழுவதும், பத்மாசனத்தில் அமர முடியாமைக்கு என்ன காரணம்?


வணக்கம் அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா?! அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம், இதில் கலந்துகொண்டோர் / வாக்கு மொத்த எண்ணிக்கை Voters286/18Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)


அன்பர்களே, தவ நேரம் முழுவதும், பத்மாசனத்தில் அமர முடியாமைக்கு என்ன காரணம்?

கால்மடக்கி தரையில் உட்காரும் பழக்கம் இல்லவேஇல்லை 38%

உடல் வளைந்து நெளிந்து எந்த பயிற்சியும் செய்வதில்லை 19%


அன்பர்களே, வெறுமனே தவம் என்று அமர்ந்தபடி மந்திரம் சொல்லுவதற்கும், பக்திபாடல்களை பாடி மகிழ்வதற்கும், கூட்டத்தோடு கூட்டமாக வழிபாடு தளங்களில் அமர்வதற்கும், யோகம் என்ற நிலையை கற்று தவம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

யோகம் என்பதில் கூட சிலர் பல பிரிவுகள் உண்டு என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் கூட யோகம் என்று சொல்லுவதுண்டு. ஆனால் யோகம் என்றால் அது ஒன்றே ஒன்றுதான், தன்னை அறிவற்கான முயற்சியோடு பயணிக்கும் பயணமான ‘குண்டலினி யோகமே’ அதுவாகும்.

பதஞ்சலி முனிவர் தொகுத்து வழங்கிய, அஷ்டாங்க யோகத்தின் ஏழாவது நிலைதான், இந்த தவம். இத்தவம் அல்லது தியானத்தை முறைப்படிதான் செய்தாகவேண்டும். அதாவது, குருவின் உதவியோடும், அவரின் தீட்சையோடும் தான் செய்யவேண்டும் என்பதும் முக்கியமாகும், மேலும், முதுதண்டு நேராக இருக்கும்படியும், தளர்வாகவும், பத்மாசன நிலையிலும் அமர்ந்து செய்தாக வேண்டும். இதற்கு நன்கு பழகி கொள்வதுதான் ஆசன பயிற்சி ஆகும். பெரும்பாலான அன்பர்கள், யோகத்தில் ஆர்வமாக இணைந்து, தவம் செய்யவேண்டும் என்றால் விருப்பம் எழாது. காரணம் அவர்களால், அந்த தவ நேரம் முழுவதும் நேராக நிமிர்ந்து, கால்களை மடக்கி, பத்மாசன நிலையில் அமரவே முடிவதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? ‘கால்மடக்கி தரையில் உட்காரும் பழக்கம் இல்லவேஇல்லை’ என்பதே உண்மை.

இக்கால குழந்தைகளுக்கும் அப்படியான பழக்கமின்றிதான் வளர்கிறார்கள். இது நிச்சயமாக மாற்றப்பட வேண்டியதே ஆகும். ஆனால் உடனடியாக செயல்படுத்திவிட முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. ‘அதனால் என்னய்யா ஆச்சு?’ என்று எதிர்கேள்வி கேட்பார்களே தவிர மாற்றிக்கொள்ள தயங்குவார்கள்.

மேலும்,

முன்பின் அப்படி நிலையில் அமர்ந்து பழக்கமில்லையே 17%

முதுகுதண்டு நேராக இருக்கும்படி அமர்வதே இல்லை 16%

என்பதும் உண்மையே ஆகும்.

உங்களால், தவத்தில், தவ நேரம் முழுவதும் அமர முடிகிறது என்றால், நிச்சயமாக உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். அந்தவகையில் நானும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். உட்கார் முடியாத அன்பர்கள், வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய, எளியமுறை உடற்பயிற்சி மூலமாக, தங்கள் உடல் பழக்கத்தை மாற்றிக் கொள்ளமுடியும். அதன்பிறகு அவர்களும் தவ நேரம் முழுவதும் அமர்ந்து தங்கள் யோகத்தை தொடர முடியும்.

வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

-

Post a Comment

0 Comments