எளியமுறை உடற்பயிற்சியை உடற்தவம் என்று சொல்லப்படுவது ஏன்?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 302 Votes/24 Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, எளியமுறை உடற்பயிற்சியை உடற்தவம் என்று சொல்லப்படுவது ஏன்?
நம்மையும் நம் உடலையும் திருத்திக்கொள்வதால் 13% (சரியான வாக்கு)
தவம் மாதிரி நினைத்து செய்யவதால்தான் 57% (அதிக வாக்கு)
-
அன்பர்களே, மனவளக்கலை வழியாக நமக்கு கிடைத்திருக்கும், எளியமுறை உடற்பயிற்சி, நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்து தந்ததாகும்! இதை உடற்தவம் என்றும் அழைப்பார்கள். உடற்தவம் என்று சொல்லுவது ஏன்? என்றுதான் இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது!
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! தவம் என்றால் என்ன? என்பது நமக்கு தெரியும். அமைதியாக ஆசனத்தில் அமர்ந்தபடி, ஏதேனும் மந்திரம் சொல்லுதல், ஏதேனும் ஒன்றையே சிந்தித்தல், ஒரு பொருள்பற்றி மனதிற்குள்ளாக ஆராய்தல், ஓடிக்கொண்டிருக்கிற மனதை, அந்த மனதையே பார்க்கவைத்தல் என்பதாக இருக்கிறது.
ஆனால் இங்கே எளியமுறை உடற்பயிற்சியை உடற்தவம் என்று சொல்லுகிறார்களே ஏன்? முக்கியமாக, நாம் உலகில் பெற்றிருக்கும் உடற்பயிற்சிகளின் மொத்த வடிவமே, எளியமுறை உடற்பயிற்சி ஆகும் என்ற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். உடலைமட்டுமல்ல, மனதையும் உற்சாகம் செய்துகொள்ளும் வகையில் பயிற்சிகள் அமைந்திருக்கிறது. மேலும் நாம் ஏற்கனவே செய்த செயல்களினால் அமைந்த விளைவுகளை, குறைகளை உடலளவில் மாற்றிக்கொள்ளவும் உதவுகிறது. வந்த நோயை சரி செய்து கொள்ளவும், இருக்கும் நோய் தாக்கத்தை ஓரளவில் குறைத்துக் கொள்ளவும், இனி நோய் வராத நிலைக்கு உடலை வைத்துக் கொள்ளவும் எளியமுறை உடற்பயிற்சி உதவுகிறது என்பதை, ஓவ்வொருவர் அனுபவமும் சொல்லும் என்பதே உண்மை.
இங்கே உடற்தவம் என்று சொல்லுவதன் காரணமும் வந்துவிட்டது. எப்படி? நம்மையும், நம் உடலையும், உடற்பதிவுகளையும், மனதையும், திருத்தி கொண்டு, உற்சாகமாக்கிக் கொள்வதாலும், நோய் தடுப்பு பெறுவதாலும், எளியமுறை உடற்பயிற்சியை உடற்தவம் என்று அழைக்கின்றோம்.
இதை முற்றிலுமாக நீங்கள் உணர விரும்பினால், நேரமில்ல்லை என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்காமல், தினமும் எளியமுறை உடற்பயிற்சியை செய்துபாருங்கள். அது உடற்தவம்தான் என்று நீங்களும் சொல்லிவிடுவீர்கள்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments