ஜீவகாந்தம் தான் மனமாகவும் செயல்படுகிறது என்பது உண்மையா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 263 Votes/20 Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, ஜீவகாந்தம் தான் மனமாகவும் செயல்படுகிறது என்பது உண்மையா?
ஜீவகாந்தம் என்பது தன்மாற்றம் அதை உணர்வது மனம் 74% (அதிக வாக்கு)
-
அன்பர்களே, இந்த ஜீவகாந்தம் மற்றும் மனம் குறித்த வாக்குப்பதிவில் சரியான வாக்கு யாருமே வழங்கவில்லை என்பதே உண்மை. நம் வேதாத்திரிய அன்பர்களுக்கு எந்த அளவில் புரிதல் இருக்கிறது? என்பதை அறிந்து கொள்ளவே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! ஜீவகாந்தம் மற்றும் மனம் என்ற இந்த வாக்கெடுப்பில், நாங்கள் கொடுத்த ஐந்து வாய்ப்பும் பொதுவான கருத்தே. அதனால்தான் 'வேறு ஏதேனும் விளக்கமான பதில் இருந்தால் அவர்கள், இங்கே பதியலாமே?!' என்ற ஒரு முதன்மையாக்கப்பட்ட கருத்தையும் நாங்கள் பகிர்ந்திருந்தோம்.
நாங்கள் கொடுத்த ஐந்து வாய்ப்பு இதுதான்...
1) மனம் என்பது தனித்தது அது இறைநிலையின் அடித்தளம்
2) ஜீவகாந்தம் என்பது வேறு மனம் என்பது வேறு
3) ஜீவகாந்தம் என்பது தன்மாற்றம் அதை உணர்வது மனம்
4) அப்படித்தான் சொல்லுகிறார்கள் ஆனால் குழப்பமே!
5) மனம் என்பதன் வழியாக ஜீவகாந்தத்தை உணர்கிறோம்
இதில் 3 வது வாய்ப்பைத்தான் 75% அன்பர்கள் அதிகம் வாக்கு கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் எதிர்பார்த்தது, உங்களுடைய புரிதலுக்கான பதிலும் கூட. ஆனால் அது நிகழவில்லை. யாருமே தரவில்லை என்பது கொஞ்சம் வருத்ததிற்கு உரியதுதான். சிலர், இதையெல்லாம் நாங்கள் கண்டுகொள்வதே இல்லை என்ற ரீதியில் கடந்தும் போயிருக்கலாம். ஒரு உண்மையை ஒருவர் பகிர்ந்துகொள்வதன் மூலமாக, உலகில் பலநபர்களின் அறிவில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்துகிறார் என்பதே உண்மை. ஆனால் அது நிகழவில்லை.
இனி, சரியான, விளக்கமான பதில் என்ன என்று பார்க்கலாமா? ஜீவகாந்தம்தான் மனமாக செயல்படுகிறது என்பது உண்மைதான். இந்த உண்மைதான் என்பதை சொன்னபிறகுதான், ஜீவகாந்தத்தின் தன்மாற்றத்தை, ஜீவகாந்தமான மனவே உணர்கிறது என்ற விளக்கத்தையும் நாம் சொல்லமுடியும். இல்லையென்றால் ‘ஜீவகாந்தம் வேறு மனம் என்பது வேறு’ என்ற தவறான முடிவுக்கு வந்துவிட வாய்ப்பு அதிகம்.
இந்த வாக்கெடுப்பின் முடிவில், நாங்கள் தெரிந்து கொண்ட உண்மை என்னவென்றால், நம் வேதாத்திரிய அன்பர்களுக்கு, ‘காந்த தத்துவம்’ குறித்த பாடங்கள் தேவைப்படுகிறது என்பதுதான். மேலும் அதில் ‘ஜீவகாந்தம்’ குறித்த விளக்கமும், ‘தன்மாற்றம்’மற்றும் ‘மனம்’ குறித்த விளக்கமும் தேவைப்படுகிறது. நாங்கள் முடிந்தளவு, இந்த விளக்கத்தை இனிவரும் நாட்களில் வழங்குகிறோம்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments