நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம்.
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
மனம் என்பதை விஞ்ஞானம் / அறிவியல் ஏன் இல்லை என்கிறது?
கண்ணுக்கும் கருத்துக்கும் கருவிக்கும் எட்டவில்லை 22% (சரியான வாக்கு)
மனம் என்பது நுண்ணிய அலைவடிவானது 57% (அதிக வாக்கு)
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், நவீன அறிவியல், எத்தனையோ கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி உண்மையை சொல்லிவிட வேண்டும். மக்களின் அறிவை வளர்க்க வேண்டும். அவர்களின் மூட நம்பிக்கையை அகற்றிட வேண்டும் என்றே செயலாற்றுகிறது. மிக நல்லதே. அம்முயற்சியை பாராட்டித்தான் ஆகவேண்டும். ஆனால் மெஞ்ஞானத்திற்கு இந்த விஞ்ஞானம் பாலமாக அமைவதே இல்லை. எல்லாவற்றையும் மறுப்பதும், வேறெரு கோணத்தில் பார்ப்பதும் நிகழும். ஆனால் மெஞ்ஞானமோ, விஞ்ஞானத்தை சில இடங்களில் ஏற்றுக்கொண்டு, தனக்கு சாதகமான இடங்களில், விளக்கத்திற்காக பயன்படுத்துகிறது, கிண்டலோ கேலியோ செய்வதில்லை.
குரு மகான் வேதாத்திரி மகரிஷி, தன்னுடைய உண்மை விளக்கத்தை நமக்குத் தருவதற்கு விஞ்ஞானம் என்ற அறிவியலை துணைகொண்டு இருக்கிறார் என்பது நாம் அறிவோம்.
அறிவியலின் மனம் இதுதான்! The mind is often understood as a faculty that manifests itself in mental phenomena like sensation, perception, thinking, reasoning, memory, belief, desire, emotion and motivation.
மனம் இருக்கிறது, ஆனால் இல்லை என்பதாக அதன் செயல்பாட்டைக்கொண்டு மட்டுமே, மனம் என்று விஞ்ஞானம் என்ற அறிவியல் சொல்லுகிறது. மேலும் மனதின் இயக்கம் (Mindwaves) என்று Electroencephalogram கருவிகளால், அளக்கிறது, அதை வெளிகாட்டுகிறது. ஒரு நொடிக்கு 40 முதல் 1 வரையிலான சுற்று என்கிறது. அதை படமாக வரைந்தும் காட்டுகிறது. ஆனாலும் மனதை, மூளையின் இயக்கத்தில் இருந்து பெறுவதாக நம்புகிறது. ஏனென்றால் மனம் நுண்ணியதாக, இயல்பில் இருக்கிறது. இதனால் தத்துவமாக இருப்பதை இல்லை என்றுதான் சொல்லும். அதனால்தான் மனம் இருக்கிறது, ஆனால் இல்லை என்கிறது!
ஆனாலும் ஒவ்வொருநாளும் பெறும் விஞ்ஞானம் தன் விளக்கத்தை மறுபதிப்பு செய்வதால், மிகவிரைவில் ‘இதுதான் மனம்’ என்று சொல்லக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்!
ஆனால், மெஞ்ஞானத்தில் மனம் என்பது என்ன என்று மிகத்தெளிவாக விளக்கிட முடிகிறது, புரிந்து கொள்ளவும் முடிகிறது. வேதாத்திரியர்களான நமக்கும் புரியும்.
வாழ்க வளமுடன்.
-
Note: Photos are collected from internet source, copyrighted to the owners, who published on their websites.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments