வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 412 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, வாழ்த்து சொல்லும் பொழுது, ஏன் துரிய நினைவில் நிற்க வேண்டும்?
எல்லோர் உயிரோடும் கலக்க துரியம் உதவும். 7% (சரியான வாக்கு)
-
நமக்கு குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லிக்கொடுத்த பாடம் ‘உள்ளதை உள்ளபடி சொல்லுவதே‘ ஆகும். இன்று எதிர்பாரதவிதமாக மிகக் குறைந்த, சரியான வாக்கு விகிதம் கிடைத்திருக்கிறது. இந்த 7% வாக்கு என்பது, நம் வேதாத்திரிய பாடங்களை, தவங்களை, தவ உண்மை விளக்க்கங்களை புரிந்துகொள்ளுதலில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பது தெரிகிறது. இன்னொரு விதமாக நோக்கினால், அடிப்படையாக சில விசயங்களை, பாடமாக பெறவில்லையோ என்றும் நினைக்க வேண்டியதாக இருக்கிறது. ஏன்?
நீங்களேதான் உங்களை கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஒருவேளை, இங்கே வாக்களித்தவர்கள், வேதாத்திரியத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவரோ என்று நினைக்க இடமிருக்கிறது. சிலர் அதற்கு தொடர்பில்லாத புதியவராகவும் இருக்கமுடியும்! ஆனாலும், மனம் விரிந்த நிலை அங்கேதான் கிடைக்கிறது 68% (அதிக வாக்குகள்) இருந்தாலும், அதை இக்கேள்விக்குரிய சரியான வாக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்பது வருத்தமே!
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! துரிய தவம் என்பது மிக உயர்ந்த, மிக சக்தி வாய்ந்த தவமே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சித்தர்கள் காலம் முதல் இன்றுவரை அதற்கு நிகரான தவம் இல்லை. அதுபோலவே மனம் விரிவு என்று சொல்லக்கூடிய ஆரம்ப நிலை அங்கேதான் துவங்குகிறது, கிடைக்கிறது என்பதும் சரியே.
ஆனால் நம்முடைய கேள்வி, ஏன் துரிய நினைவில் நிற்க வேண்டும்? என்பதுதான். துரிய தவத்தை 1008 இதழ்கள் கொண்ட தாமரையாக (சகஸ்ரதாரா) சொல்லுவார்கள். அத்தனை நுண்மையானது இந்த துரிய நிலைத் தவம். துரியதவம் தொடர்ந்து செய்யச்செய்ய, எதுவாக நினைக்கிறோமோ, அதுவாக மாறக்கூடிய தன்மை உருவாகிடத் துவங்குகிறது.
அந்த உண்மையின் பொருட்டே, துரியத்தில் நின்று, யாரை நினைத்து வாழ்த்துகிறோமோ அவர் உயிரோடு கலந்து, அந்த வாழ்த்து அவரிடம் சேர்ந்து விடும். இதை நாம், துரியம் நன்கு ஆழ்ந்து செய்துவரவர, நம்முடை வாழ்த்தும் மேன்மை அடையும். எனவே, வாழ்த்து சொல்லும் பொழுது, ஏன் துரிய நினைவில் நிற்க காரணம், நாம் சொல்லும் வாழ்த்தின் வழியாக எல்லோர் உயிரோடும் கலக்க துரியம் உதவும்.
இன்னும் விரிவான தகவல்களோடு வேதாத்திரிய சானலில் பதிவிடுகிறோம். காத்திருங்கள். ஏற்கனவே வாழ்த்து குறித்த பதிவுகளை அங்கே காணலாம். கீழே தரப்பட்டிருக்கும் சுட்டிகளை அழுத்திடவும்!
அருட்காப்பு / வாழ்த்துவதால் எழும் நன்மை / வாழ்த்துவது நல்லதா? /
மனதின் அலையும், வாழ்த்தும் / வாழ்த்தின் மேன்மை
வாழ்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments