Ticker

6/recent/ticker-posts

Are you okay with anybody speaking about Vethathiriyam?

வேதாத்திரியம் குறித்து யார் பேசினாலும் கேட்டுக் கொள்வீர்களா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 457 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, வேதாத்திரியம் குறித்து யார் பேசினாலும் கேட்டுக் கொள்வீர்களா?

கேட்பேன் ஆனால் அதில் உண்மை என்ன என ஆராய்வேன் 20% (சரியான வாக்கு)

-

ஆனால், ஆமாம், நான் வேதாத்திரியத்துக்கு மதிப்பளிக்கிறேன் 70% என்று அதிக வாக்கு அளித்திருக்கிறார்கள். வேதாத்திரியத்திற்கு நீங்கள் மதிப்பளிப்பது நன்று, அதற்கான உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். நாங்கள் இங்கே, வாக்குப்பதிவில் கேட்ட கேள்வி, வேதாத்திரியம் குறித்து யார் பேசினாலும் கேட்டுக் கொள்வீர்களா? என்றுதானே தவிர, வேதாத்திரியத்திற்கு மதிப்பளிப்பீர்களா? என்று அல்ல!

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! அன்பர்கள் இந்த வாக்குப்பதிவுகளை எந்த நோக்கத்தில் பார்க்கிறார்கள் என்று எங்களுக்கே புரியவில்லை. எங்கள் வேதாத்திரிய சேனலின் நோக்கம், அவர்களின் தேடுதலில் இன்னும் ஆர்வமாக, விளக்கமாக மாறவேண்டும் என்று துணை செய்வதுதான்.  ஆனால் இவர்களாகவே எதோ புரிந்துகொண்டு, சரியான வாக்கு என்று தவறான ஒன்றை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இப்படித்தான் தலைவர்களை தேர்ந்தெடுக்கிறார்களோ? என்று நினைக்கத் தோன்றுகிறது. நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே ‘மக்கள் எவ்வழியோ, தலைவனும் அவ்வழி’ என்பதாக இருக்கிறதே?! 

சரி, இப்பொழுது வாக்குக்கு வருவோம். நீங்கள் வேதாத்திரியத்திற்கு மதிப்பளிப்பதால் யார் பேசினாலும் கேட்டுக்கொள்வேன் என்று அர்த்தமாகிறது. அப்படியானால் உங்களை ஏமாற்றுபவர்களிடமும் சிக்கிவிடுவீர்களே?! உலகநடப்பில், மக்களிடம் நயமாக பேசி ஏமாற்றுபவர்கள்தான், பெரும் காரியம் சாதிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?! அதுபோல வேதாத்திரியத்திலும் சிலர் இருப்பார்களே!

அதை கேட்டு, நம் குரு மகான் என்ன சொன்னார்? நிஜமாகவே அப்படி சொல்லியிருக்கிறாரா? மன்றத்தைச் சார்ந்த ஆசிரியர், பேராசிரியர், முதுநிலை பேராசிரியர் யாராவது இதை ஆமோதித்து இருக்கிறார்களா? என்று உண்மை என்ன என்று ஆராயாமல், இவர் வேதாத்திரியத்தை பேசுகிறார் என்றே ஏற்றுக்கொள்வீர்களா? பேசுவரின் உண்மைத்தன்மை, அனுபவம், வழக்கம், பழக்கம், சராசரி வாழ்வில் எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்றெல்லாம் யோசிக்க வேண்டாமா? இந்த வாக்குகள் அளித்த 70% அன்பர்கள் யாரிடம் ஏமாந்து கொண்டிருக்கிறார்களோ என்று தெரியவில்லையே?!

தேவையில்லாமல் குழுப்புகிறார்கள் எனில் நிராகரிப்பேன் 2% என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால் இதற்கு வேதாத்திரியத்தில் நல்ல அனுபவம் தேவைப்படுகிறது. எனவே பேசுவதை கேட்டுவிட்டு, அது உண்மையா என்று ஆராய்வதே சிறந்தது.

வேதாத்திரிய அன்பர்களே, இனிமேலாவது ஆராய்ந்து பார்த்து, ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்களேன். அந்த வகையில் சிறக்க உங்களை வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்!


Thanks image to:@dreamstime

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments