Ticker

    Loading......

Why does greed arise?

பேராசை ஏன் எழுகிறது? என்ன காரமாக இருக்கும்?


நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.

பேராசை ஏன் எழுகிறது என்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா?!

தகுதி, தேவையை மீறிட்ட ஆசையின் தொகுப்பு 68% (சரியான வாக்கு)

இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றே மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே ஆசை தேவையே இல்லை என்ற கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த உலகில் ஆசை இல்லாமல் வாழவே முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நான் இந்த உலகில் நன்றாக, நிறைவாக, சந்தோசமாக வாழ்வேண்டும் என்பது கூட ஆசைதானே?! ஆனால் அந்த ஆசை, தன் தகுதி, நிலை, காலம் விடுத்து பேராசையாக மாறிவிடக்கூடாது. பேராசையாக மாறும் பொழுதுதான் தனக்கும், பிறருக்கும் அது வாழ்க்கை துன்பத்தை விளைவிக்கிறது என்று அறிக.

ஆம், அந்த பேராசையை நிகழ்த்திக்காட்டும் வகையில் நாம் செயல்படும் பொழுது நம்மையறியாமல், பிறருடைய மனதிற்கும், உடலுக்கும், உடமைகளுக்கும் துன்பத்தை விளைவிக்கிறோம். அதுவே நமக்கு கர்மா எனும் வினைப்பதிவாக மேலும் புதிதாக பதிந்துவிடுகிறது. வாழ்க்கையும் திசை மாறுகிறது. பேராசையை அகத்தாய்வால் சீரமைத்து நன்மை பெறுவோம்.

வாழ்க வளமுடன்

Note: Photos are collected from internet source, copyrighted to the owners, who published on their websites.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments