Ticker

    Loading......

What is the main cause of stubbornness?

கடும்பற்றின் முக்கிய காரணம் என்ன?


நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.

கடும்பற்றின் முக்கிய காரணம் என்ன என்று சொல்லுவீர்கள்?

எனக்கு வேண்டும் என்ற ஆசைதான் 45% (சரியான வாக்கு)

இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், எனக்கு வேண்டும் என்ற தன்னலம், சுயநலம் அது ஈகையாக மாறனும் 18% (கூடுதல் சிறப்பு வாக்கு). பெரும்பாலும், எல்லாமே தனக்குத்தான் என்ற எண்ணம் குழந்தையாக இருக்கும் பொழுதே வந்துவிடுகிறது. எனவே இவ்வெண்ணம் எழுவது இயற்கை என்றாகிறது. ஆனாலும் வளர்ந்து வரும் பருவத்தில், தானும் மற்றவர்களும் ஒன்றுதான் என்ற பொதுநல தன்மைக்கு மாறியாக வேண்டும். இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தரலாம்.

உலகின் சில நாடுகள், பொதுநல தன்மை கொண்ட மக்களைக் கொண்டிருப்பதை நாம் காணமுடியும். பெரும்பாலும் உலகபோரில் கலந்து பெரும் அழிவைக்கண்ட நாடுகள் மீண்டு எழுந்து, இழப்பின் வழியாக பாடம் கண்டு, எல்லோரும் இங்கே சமமே என்ற நிலைக்கு வளர்ந்திருக்கின்றன. நம் இந்திய நாடு, உலகப்போரில் தொடர்பு ஏற்படுத்தாவிட்டாலும், பன்னெடுங்காலமாக பிறவகையான தாக்குதலை பெற்றிருக்கிறது. அத்தனையும் மீறிதான் இன்னமும் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. கூடதலாக, வாழும் எல்லோரும் சமமே என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டால் முழுமை கிடைத்துவிடும்.

வாழ்க வளமுடன்.

Note: Photos are collected from internet source, copyrighted to the owners, who published on their websites.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments