எப்போதும் பரபரப்பாக இருப்பதும், ஏதாவது செய்யவேண்டுமே என்று இருப்பதும் சுறுசுறுப்பின் அடையாளமா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 278 Votes/17 Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, எப்போதும் பரபரப்பாக இருப்பதும், ஏதாவது செய்யவேண்டுமே என்று இருப்பதும் சுறுசுறுப்பின் அடையாளமா?
அது ஒரு பிரச்சனை அதை அமைதி செய்ய வேண்டும் 50% (சரியான / அதிக வாக்கு)
அன்பர்களே, நாம் வாழும் இந்த பூமி நொடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ, நம்முடைய வாழ்க்கையில் அதைவிட வேகமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருக்கிறோம் என்பது உண்மைதானே?!
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
இந்த உலகில், நாமும், பெரும்பாலான மனிதர்களும் அன்றாட வாழ்வில் பரபரப்பாக இயங்கவேண்டியதாக உள்ளது. இதில் வயது வித்தியாசமே இல்லை என்றுகூட சொல்லமுடியும். பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுமி / சிறுவனை கேளுங்கள். ‘எனக்கு எவ்வளோ வேலை இருக்கு தெரியுமா? தொந்தரவு செய்யாதே!’ என்று சினம் கொள்ளுவார் என்பது உண்மை. அவர்களை குளிப்பாட்டி, நேர்த்தியாக்கி, சாப்பிடவைத்து காலையில் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் அம்மாமார்கள் இன்னும் பரபரப்பாக இருப்பார்கள். அந்த குழந்தைகளை பள்ளியில் சென்று விட்டுவிட்டு, வேலைக்குச் செல்லும் தந்தைமார்கள் அதைவிட பரபரப்பாக இருப்பார்கள். அக்குழந்தைகளை ஏற்றி பள்ளியில் விடும் ஆட்டோ ஓட்டுனர் கூட பரபரப்பாக இருப்பார் என்பது உண்மையே!
இந்த பரபரப்பும், அடுத்தடுத்து ஏதேனும் செய்யவேண்டும் என்பது சரியானதுதானா? இயல்பானதா? சுறுசுறுப்பின் அடையாளமா? என்று கேள்வி எழுமானால். இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படியானால் ஏன் அப்படி இருக்கிறோம்? நாம் காணும் மற்றவர்களும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிலையில் இருக்கிறார்கள்? ‘அது ஒரு பிரச்சனை அதை அமைதி செய்ய வேண்டும்' என்பதுதான் சரியானது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், மன ரீதியான ஒரு பாதிப்பு என்றும் சொல்லலாம்!
நமக்கு கிடைத்த சில வாக்குகள்...
ஆமாம் அப்படி இருந்தால்தான் வாழ்வில் நல்லது 17%
தேவைப்படும் பொழுது சுறுசுறுப்பாக இயங்கலாம் 27%
பரபரப்பு, ஏதெனும் செய்யவேண்டும் இரண்டும் முக்கியம் 4%
என்னசெய்ய அப்படி இருந்தால்தான் நம்புகிறார்கள் 2%
குருமகான் வேதாத்திரி மகரிஷியின் மூலம், மனவளக்கலையில் அகத்தாய்வு செய்துவந்தால், இந்த தேவையில்லாத பரபரப்பையும், ஏதேனும் செய்யவேண்டுமே என்ற உறுத்தலையும் நாம் தணித்துக்கொள்ள முடியும்.
இந்த நவீன கால வாழ்க்கையின் இயல்பாக நாம் ஏற்றுக்கொண்டதை மாற்றிட, நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இல்லையேல் நாம் நம்முடைய அன்றாட வாழ்வில், போலியான இன்பத்தை தேடியே செல்வோம். உண்மை இன்பத்தை இழந்துவிடுவோம் என்பது உறுதி.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments