சுத்தவெளி ஏன் இயங்கியது?!
சுவாமிஜி, சுத்தவெளி என்பது அமைதி நிலையில் உள்ளதா? அதில் சூழ்ந்தழுத்தும் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது. அது இயக்கமின்றி அமைதி நிலையிலேயே எப்பொழுதும் இருந்து இருக்கலாமே?
பதில்:
சுத்தவெளி அமைதியாய் இருக்கிறது என்றால் அசைவற்றது (Static) என்று பொருளல்ல. அதில் ஆற்றல் நுண்ணியக்க நிலையில் (Kinematic Quivering State) இருக்கிறது. அது தன்னையே இறுக்கிக் கொள்ளக்கூடிய (Self-Compressive Surrounding Force) ஆற்றலாகவும் உள்ளது. அந்த ஆற்றலானது எப்போதும் அதிகரித்துக் கொண்டே (Ever increasing) இருந்து கொண்டு இருக்கிறது. இந்தப் பண்பினால் சுத்தவெளி அமைதி நிலையில் இருக்க முடியாது.
அதனுடைய துண்டுபட்ட பகுதியாகிய நாம் அமைதியாக இருக்கிறோமா? ஒரு சில நேரங்களில் அமைதியாக இருப்பதாகக் கூறுகிறோம். ஆனால் அப்பொழுதும் உடலியக்கம் அல்லது மன இயக்கம் நடந்து கொண்டு தான் உள்ளது. சுத்த வெளி அமைதி நிலையிலேயே இருந்திருக்குமானால் பரிணாமமும் இல்லை. இந்த பிரபஞ்சமும் தோன்றியிருக்காது. நாமும் இருந்திருக்க மாட்டோம்.
வாழ்க வளமுடன்!!
0 Comments