வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 350 votes.
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
அன்பர்களே, தனக்குக் கிடைத்த இறையறிவு விளக்கத்தைக் கூட பிறரிடம் பகிராமல் இருக்க காரணம் என்ன?
எனக்கு நம்பிக்கை இருக்கு, அவங்களுக்கு இல்லை 68% (சரியான / அதிக வாக்கு)
இக்கருத்து பொதுவாகவே ஒவ்வொருவர் மனதில் எழும் என்பதே உண்மை. ஆனால் இது சரியான முடிவுதானா?
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே, இந்த உலகில் பரபரப்பு என்று எடுத்துக் கொண்டால், அது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரப்பும் செய்தியால்தான். அந்த செய்தி உண்மையா / பொய்யா என்று கூட ஆராயாமல் பகிர்வதே வழக்கம். எனக்கு கிடைத்தது சொன்னேன் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் தனக்கு நன்மை தந்த / தரும் உண்மைகளை சிலர் ரகசியமாக வைத்துக்கொள்வதும் உண்டு. ஆனால் நெடுநாளைக்கு உண்மையை மறைக்கவும் முடியாதே!
இங்கே நாம் வாக்கில் எடுத்துக்கொண்டது, யோகத்தின் உண்மைகள். பத்துபேருக்கு ஒருவர்தான் ஆர்வமாக இருப்பார். அதனால் அதை இன்னொருவருக்கு சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அதனால் 1) நான்லாம் சொல்லி எவன்ங்க கேட்க போறான்?! 2) அதுஅதை அவங்கவங்களே தேடி பார்க்கட்டுங்க 3) இதெல்லாம் எனக்கு தேவையில்லாத வேலைங்க 4) சொன்னால் ஆயிரம் கேள்வி கேட்பானுங்க, என்று சொல்லி ஒதுங்கிவிடுவார்கள். ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவுதான்.
ஆனால், உங்களோடு இருக்கும் மற்ற நபர்களில் யாரேனும் ஒருவருக்கு, உங்கள் ஆலோசனை / பகிர்வு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமானால், வாழும் ஒரு மனிதனுக்கு நான் யார்? என்று தன்னையறிய தூண்டுதலாகிவிடுமே! அவரும் உங்களை வாழ்த்தி மகிழ்வார். உங்களுக்கும் ஒரு நிறை உண்டாகும். எனவே, அடுத்தவர் என்ன நினைப்பார் என்று நீங்கள் முடிவு செய்யாமல், சொல்லிப்பாருங்கள். ஏற்பதும் ஏற்காததும் அவர் முடிவு. சரியா?!
வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments