தன்முனைப்பான நடவடிக்கைகள் தான், வாழ்விலும், இறையுணர்விலும் தடையை உருவாக்குகிறது என்பது உண்மையா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 237Votes/17Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, தன்முனைப்பான நடவடிக்கைகள் தான், வாழ்விலும், இறையுணர்விலும் தடையை உருவாக்குகிறது என்பது உண்மையா?
ஆம், உண்மையே அதுதான் 77% (அதிக வாக்கு)
என்னிடம் தன்முனைப்பு இல்லை ஆனால் தடை நிறைய 10% (சிறப்பு வாக்கு)
அன்பர்களே, பெரும்பாலான மக்கள், தன்முனைப்பு என்பதெல்லாம் எனக்கு இல்லை என்றுதான் சொல்லுவார்கள். இங்கேயும் கூட ‘ என்னிடம் தன்முனைப்பு இல்லை, ஆனால் தடை நிறைய’ என்று சிறப்பு வாக்கு அளித்திருக்கிறார்கள். இவர்களிடம் தன்முனைப்பு குறித்த புரிதல் இல்லை என்றுதான் பதில் தரவேண்டியுள்ளது.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
எப்படி அவ்வளவு உறுதியாக சொல்லுகிறீர்கள்? என்று கேட்டால், தன்முனைப்பு இல்லாத வாழ்க்கை வாழ்பவர்கள், இந்த இயற்கையோடு அதன் இயல்பு தன்மையோடு ஒன்றிவாழும் முறைக்கு மாறிவிடுவார்கள் என்பதே உண்மை. அப்படியான நிலையில் இந்த 10% அன்பர்கள் இருப்பார்களா? என்று கேட்டால், என்னபதில் தருவார்கள்? இதனால்தான் தன்முனைபற்ற நிலை, ஞானிகளுக்கு உரிய தன்மையாக கருதப்படுகிறது.
அப்படியானால், சாரசரி, சாதாரண மனிதனுக்கு அத்தன்மை கிடைக்காதா? என்றால் கிடைக்கும். அதை வாழ்நாளில் நன்கு புரிந்து, தன்முனைப்பற்ற வாழ்க்கைக்கு மாறிவிட மிகுந்த வாய்ப்பும் உள்ளது. அதற்கு தன்னை யார் என்று அறியும் கேள்வியான ‘நான் யார்?’ என்பதற்கு விடை கண்டுபிடித்தாக வேண்டும். இந்த விளக்கமில்லாத, தன்முனைப்பு அகற்றுதல் வெறும் கண் துடைப்பு மட்டுமே ஆகும். வேறெந்த பயிற்சியாலும் களைந்துவிட முடியாது எனலாம்.
இந்த தன்முனைப்பு இரண்டு வழிகளில் உண்டாகிவிடுகிறது. 1) தான் என்ற அதிகார பற்று 2) தனது என்ற பொருள் பற்று ஆகிய இரண்டும் ஆகும். உலகில் வாழ்கின்ற ஏறக்குறைய 99.9% மக்களுக்கு இந்த தான் / தனது என்ற நிலைபாடு இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடியும். தன்னைமீறிய இயற்கை, அதனோடு இணைந்திருக்கும் இறையாற்றல் அல்லது தெய்வீகம் இவற்றை மறந்து, இதன் நீதி கண்டுகொள்ளாமல், ஒருவர் செயலாற்றுவதும், தன்னை முன்னிறுத்திக் கொள்வதுமே தன்முனைப்பு. இதனால் தனக்கும் துன்பம், அவரைச்சார்ந்த பிறருக்கும் துன்பம் என்பது உண்மைதானே. அப்படியாக இந்த தன்முனைப்புத்தான் மனிதர்களின் வாழ்வில் தடையாகவும், இறையுணர்வு எனும் தெய்வீகத்தை அறிந்திடவும் தடையாக உள்ளது. விளக்கம் பெற்று சிந்திப்பீர், உயர்வீர்!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments