வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 383 votes.
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
அன்பர்களே, காயகல்ப பயிற்சியை நீங்கள் செய்துவருவதால், உணவு எடுத்துகொள்வதில் மாற்றம் உள்ளதா?
வழக்கத்தை விட உணவு கொஞ்சம் குறைந்துவிட்டது 75% (சரியான / அதிக வாக்கு)
காயகல்ப பயிற்சியில், நம் வேதாத்திரிய அன்பர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது என்ற உண்மையை இங்கே அறிய முடிகிறது. 75% மிகச்சரியாக சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! அன்றாடம், நம் வாழ்வில் உணவுக்கு தரும் முக்கியத்துவம் போல வேறு இல்லை. பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்ற முதுமொழி எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் பொதுவாக நாம் மூன்றுவேளை உணவு எடுத்துக்கொள்வது என்ற நிலையில்தான் வாழ்ந்து வருகிறோம். சிலருக்கு அதில் மாற்றம் இருக்கும். அதுபோக இடையிடையே நொறுக்கு தீனிகளும் இருக்கும்.
மேலும் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும், பசி தீரவில்லை என்பார்கள். சிலரோ கொஞ்சம்தான் சாப்பிட்டேன் வயிறு நிறைந்துவிட்டது என்பார்கள். இன்னும் சிலர் பசியே எழவில்லையே என்பார்கள். காரணம் அவர்களிடையே இருக்கிற செரிமான கோளாறு எனும் நோய்தான். அதை மாத்திரை மருந்தால் சரி செய்வதை விட, குரு மகான் வேதாத்திரி மகரிஷி நமக்குத் தந்த காயகல்ப பயிற்சி சிறப்பாக உதவும் எனலாம்.
பயிற்சி செய்த உடனே இந்த மாற்றம் ஒரு சாதகருக்கு கிடைத்துவிடுமா? என்றால் இல்லை. நாம் நம்முடைய உடலை, உணவால் கெடுத்துத்தான் வைத்துள்ளோம். அதை உடனடியாக சரி செய்துவிட முடியுமா? எனவே மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் ஆகலாம். முக்கியமாக இந்த காயகல்ப பயிற்சியை, ஒழுங்காக, மிகச்சரியாக, குறிப்பிட்ட நிலைகளில், நேரங்களில் செய்ய வேண்டியது முக்கியம். நிலைகளில், செய்வதில் சந்தேகம் எழுந்தால் உடனடியாக, தகுந்த ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதுவரை சிலர் 1) வழக்கம்போல தான் சாப்பிடுகிறேன் மாற்றமில்லை 2) நல்ல செரிமானம் எனவே நிறைய சாப்பிடுகிறேன் 3) நல்ல பசி எடுப்பதால் நன்றாக சாப்பிடுகிறேன் 4) இன்னும் நிறைய சாப்பிடனும்னுதான் தோணுது என்றுதான் சொல்லுவார்கள். பயிற்சியும் காலமும் இவர்களுக்கு உதவும்.
சரி, ஏன் வழக்கத்தை விட உணவு கொஞ்சம் குறைந்துவிட்டது? காரணம் என்ன? உங்கள் உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் தேவையான சக்தி, சாப்பிடுகின்ற உணவில் மட்டுமே கிடைத்துவிடுவதில்லை என்பதை இந்த உடல், அதற்குறிய அறிவு புரிந்துகொண்டு விடுகிறது. இதனால் தானாகவே, இந்த அளவு உணவு எனக்குப் போதும் என்று உடலறிவு தீர்மானிக்கிறது. நல்லதுதானே?
வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments