Shri. Vethathiri Maharishi |
நம் வேதாத்திரிய சானலில், ஒரு வாக்கெடுப்பு நிகழ்ந்தது, அதில்,
வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சியின் முக்கிய நோக்கம் என்ன?
உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை நீடிப்பது 13% (சரியான வாக்கு)
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால்,
உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை நீடிப்பது ஏன்? அப்பொழுதானே வாழும் காலத்திற்குள் யோகத்தின் வழியே உயரமுடியும்! அதன் வழியாகத்தான் மற்ற எல்லா பயன்களும் கிடைக்கின்றன.
உடலைக்கொண்டுதானெ உலகில் உயிர் வாழ்கிறோம். அந்த வாழ்க்கையில் உடல் நலமாக இருக்கவேண்டும், உடல் நலமாக இருந்தால்தான் நோய்கள் எளிதில் அண்டாது. மேலும் நலமாக இருக்கும் உடலில்தான் உயிராற்றலும் மிகும். அதனால் பிறப்பின் நோக்கமான தன்னை அறிதலில் எத்தடையும் நேர்ந்துவிடாது அல்லவா?
வேதாத்திரியத்தில் பயணிப்பவர்களில் பலர், காயகல்ப பயிற்சி தொடர்ந்து செய்துவரும் வேளையில், தவம் நன்றாக கைகூடுவதை உணருவார்கள். எவ்வளவு நேரம் தவம் செய்தாலும் அதில் முன்னேற்றம் அடைவதையும் அறிவார்கள். அத்தகைய உதவும் சக்தி கொண்டது, வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமைத்துக்கொடுத்த காயகல்ப பயிற்சி.
ஒரு சிலர், ஐயா, நான் யோகத்தில் இல்லை, காயகல்ப பயிற்சி மட்டும் செய்கிறேன் என்பவர்களின், குழந்தைகள்/ பேரக்குழந்தைகள் தகுந்த வயதில் தானாகவே யோகத்தில் இணைந்து, நான் யார்? என்ற தத்துவத்தை புரிந்துகொள்வார்கள்.
அது ஏன் என்று யோசித்துப்பாருங்கள்.
0 Comments