Ticker

6/recent/ticker-posts

Order of Living on Earth


 வாழ்க்கை நெறி


உலகில் பிறந்து வாழ்ந்த எந்த உயிரும், எக்காலத்தும் அழிவுறுவதில்லை. வினைப்பயனாக ஏற்படும் பழிச்சுமைப் பதிவுகள், வாழ்வில் கண்ட விளக்கம், அல்லது உலக இன்பம் துய்க்கும் வேட்பு இவற்றிற்கு ஏற்ப இயங்குவதில் இடமாற்றம் பெறுகின்றன. வாழும் உயிர்களுக்கு நலமோ, கேடோ தருவனவாக அமைகின்றன.

ஆழ்ந்து மனித சமுதாயத்தின் வாழ்க்கை நிலையை அறிவு நிலையைச் சிந்தித்தோமானால், ஒவ்வொரு மனிதனுடைய உயிரும் இன்று வாழும் மக்களுடைய உயிரில் மலர்ந்து வீசிக் கொண்டிருக்கும் நினைவலைகளோடும், இதுவரையில் வாழ்ந்து இறந்து போன உயிர்களில் அடங்கியுள்ள ஆற்றலோடும் தொடர்பு கொண்டுதான் இயங்குகிறது என்ற உண்மை தெளிவாகும். அறிவில் விளக்கம் பெற்ற மகான்கள் உலக மக்கள் அறிவைத் தெளிவு வழியிலும், மற்றவர்கள் மக்களை மயக்க வழியிலும் செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த இரண்டு பக்கங்களின் இழுப்புகள் எங்கெங்கு எந்த அளவு வெற்றி பெறுகின்றனவோ, அதற்கேற்ற செயல்களும், விளைவுகளும் மனித சமுதாயத்தில் காணுகின்றன. ஆயினும், விஞ்ஞான அறிவு பெற்ற பலர் மெய்ஞானம் பெறுங்காலம் அண்மையில் உள்ளது. அப்போது எல்லா மக்களும் விடுதலை வழியில் வாழ்ந்து அமைதிபெற ஏற்ற சமுதாய வாழ்க்கை நெறி உருவாகிவிடும்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி

Post a Comment

0 Comments