நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
அதிகமாக சினம் கொள்வோர் மயங்கி கீழே விழுவது ஏன்?
சினம் வழியே உயிராற்றல் இழப்பாகிறது 41% (சரியான வாக்கு)
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், உங்களுக்கோ, உங்கள் வாழ்க்கை துணைவருக்கோ, குழந்தைகோ சினம் எழுவது உண்டு. உண்மைதானே?! இல்லை என்று என்னிடம் மறுக்க முடியாது. சினம் எழுகின்ற அந்த நேரத்தில், சினம் கொண்ட நபர், நாம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வதில்லை. ஒரு மாதிரியான பதட்டம் காணப்படும். வார்த்தைகள் தடுமாறும். கண்கள் சிவக்கும். எதையாவது தூக்கிப்போட்டு எறிந்துவிடுவார். அருகில் இருந்தால் அடித்தும் விடுவார். கத்துவார், தீடீரென தடுமாறி கீழே விழுவார். சரிதானே? உங்களுக்கு கூட இந்த அனுபவம் கிடைத்திருக்குமே?!
ஒருவரின் சினம், கோபம் என்ன செய்கிறது? அவருடைய மன, உடல் இயக்கத்தை வேகப்படுத்துகிறது. இதனால் அவர் தன் உயிரையும் வேகப்படுத்திக் கொள்கிறார். இந்நிலையில் உயிர்த்துகள் சில அதன் இருப்பில் இருப்பில் இருந்து வெளியேறுகின்றன. அதனால்தான், உடல், மன, மூளை, உடல் உறுப்புக்களின் செயல்பாடும், இரத்த ஓட்டமும், சுவாசமும், உடல்வெப்பமும் பாதிப்பு அடைகிறது.
அடிக்கடி உங்களுக்கு சினம் வருமானால், உங்கள் ஆயுளை பரிசோதனை செய்ய வேண்டும். உயிர்தான் மன, உடல் இயக்கத்திற்கு மூல காரணி என்பதை மறவாதீர்.
வாழ்க வளமுடன்.
Note: Photos are collected from internet source, copyrighted to the owners, who published on their websites.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments