வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 426votes.
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
அன்பர்களே, அருட்காப்பு இட்டுக்கொண்டால் நல்லது என்பது எப்போது தெரிந்தது?!
முழுமையாக எனக்கு அருட்காப்பு உதவுகிறது என்பேன் 84% (அதிக / சரியான வாக்கு)
எதிர்பார்த்ததை விட அதிக அன்பர்கள் சரியான வாக்கு அளித்திருக்கிறார்கள். அந்த அளவு நன்மையை, பாதுகாப்பை உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது, உங்கள் அனைவரையும் வாழ்க வளமுடன் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! வேதாத்திரி மகரிஷி அவர்கள், மனவளக்கலை யோகத்தின் வழியாக, தன்னையறியும் தன் அன்பர்களுக்காக, ஒரு பாதுகாப்பை தரவிரும்பியே, இந்த ‘அருட்காப்பை’ வடிவமைத்தார். அதுவும் வெற்று வார்த்தையாக இல்லாமல், நாமே விரும்பி, புரிந்து, அனுபவித்து, தெய்வீக பேராற்றலான, அருட்பேராற்றலால் வழங்கப்படும் பாதுகாப்பு அது. வேதாத்திரியத்தில் இல்லாத பொதுநபர் இதை உணர்ந்து சொன்னால் கூட, அவருக்கும் அந்த பாதுகாப்பு உதவும் என்பது உறுதியே!
‘அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்துவதாகவும் அமையுமாக!’என்பதே அருட்காப்பு. எப்படிப்பார்த்தாலும் இது முழுமையான ஒரு கவசம், பாதுகாப்பு வளையம், முழுமை வட்டம் என்று சொல்லலாம். அதன்படி, நமக்கு எந்தஒரு ஊறும் நிகழாதவாறு தடுப்பும், பாதுகாப்பும் கிடைக்கிறது எனலாம். வார்த்தையால் சொல்வதை விட அனுபவமே சிறப்பாகும்.
ஆனால், எல்லாவற்றை உதாசீனப்படுத்த ஆட்கள் இருப்பார்கள் தானே? அவர்களை நாம் விட்டுவிடலாம். அவர்களுக்கு பாடம் படிக்கவேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது, நாம் ஏன் அதை தடுப்பானேன். படிக்கட்டுமே?! விட்டுவிடுக. அவர்களிடம் அருட்காப்பு, அதன் பயன்கள் சொல்லி நாம் அயர்ச்சி அடையவேண்டாம்.
பெரும்பாலும், வேதாத்திரிய அன்பர்கள் தவம் செய்யும் பொழுது மட்டும்தான், அருட்காப்பு இடவேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி அல்ல. எப்பொழுதும் சொல்லலாம், எந்நேரமும் சொல்லலாம், எந்த வேலை, காரியம், பயணம் தொடங்கும் பொழுதும் சொல்லலாம். அதன் பலனை பெறலாம்.
‘ஏங்க இதெல்லாம் சொன்னாமட்டும் நமக்கு ஒன்னும் ஆகாதா? இதை நாங்க நம்பனுமா?’ என்று கேட்கிறீர்களா? இதைச் சொல்லியும் உங்களுக்கு எதாவது ஆகிறது என்றால், அந்த அளவிற்கு உங்களை கெடுத்துவைத்திருக்கிறீர்கள் என்பது உண்மை. ஆனாலும் தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போயிற்று என்று தப்பிக்க வழி ஏற்படக்கூடுமே?! அது வேண்டாமா?
அருட்காப்பு ஒரு முழுமை, விரும்பு ஏற்கும் ஒரு பாதுகாப்பு, அதை தவிர்க்காதீர்!
வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments