வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 372votes.
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
அன்பர்களே, ஏன் உங்களால் ‘வாழ்க வளமுடன்’ என்று அடிக்கடி சொல்ல முடிவதில்லை?
நான் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன் 76% (அதிக / சரியான வாக்கு)
பெரும்பாலான அன்பர்களின் தேர்வாக இருப்பது குறித்து மகிழ்கிறேன். மிக எளிமையான வழியில், நமக்கும், பிறருக்கும் நன்மைபயக்கும் ஒரு மந்திரமே. ‘வாழ்க வளமுடன்’என்று சொன்னால் மிகையில்லை. நம் குரு வேதாத்திரி மகரிஷி அவர்களை வாழ்த்தி வணங்குவோம்.
சரி, சிலருக்கு ஏன் சொல்லமுடிவதில்லை?! இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! ஒரு வார்த்தையை சொல்லை பேச வேண்டும் என்றால், மனம், மூளை, வாய், நாக்கு, காற்று, குரல்நாண் இவை வேலை செய்ய வேண்டும் அல்லது வேலை செய்யவைக்க வேண்டும். சாதாரண பேச்சுக்கே இப்படியென்றால், ஒரு மந்திரம் சொல்லுவதாக இருந்தால் எப்படி செயல்படவேண்டும்?! கொஞ்சம் வியப்பாக இருக்கிறதுதானே! ஆம் உண்மையே. மந்திரம் என்றால் அதில் ஒலிக்குறிப்பும், அதிர்வுகளும், அலைவீச்சும் இருக்கும். நீங்கள் வழக்கமாக சொல்லும் மந்திரங்களை ஆராய்ந்து பாருங்கள், நான் சொல்லும் இந்த உண்மை புரியலாம்.
அதன்வழியாகவே, நம் மகரிஷி ஆராய்ந்து அறிந்து, ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்று வடிவமைத்தார். இதை நீங்கள் மிக சாதாரணமாக, எளிமையாக, அசால்டாக சொல்லவே முடியாது. உங்கள் மனம் அதில் ஈடுபடவேண்டும். இதை மந்திரம் என்று புரிந்துகொள்ளவும் வேண்டும். இல்லையானால், 1) அதைச்சொன்னால் மூச்சு வாங்குதுங்க 2) அதை சொன்னால் கிண்டல் செய்கிறார்கள் 3) அதெல்லாம் எப்பவும் சொல்றதே இல்லைங்க 4) சொன்னாமட்டும் ஏதாவது நடக்கபோகுதா? என்றுதான் சொல்லவும் , கேட்கவும் தோன்றும்.
இன்னும் சில, தமிழ்படித்த மேதாவிகள், ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்லக்கூடாது என்று கூறுகின்றனர். ‘ஐயா, ஆசாமிகளே, இது மந்திரமய்யா’ என்று எத்தனைதடவைதான் விளக்கமளிப்பது?! சரி, இனி உங்கள் முடிவு என்ன? பகிருங்கள்!
வாழ்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments