நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம்.
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
அன்பர்களே, இந்த வாழ்க்கையில் துன்பச் சிக்கலைத் தீர்க்க என்ன வழி?
தன்னை யாரென்று உணர்ந்த தெளிவு தேவை 56% (அதிகமான / சரியான வாக்கு)
வாழ்க்கையில் துன்ப சிக்கலை தீர்ப்பதற்கும், தன்னை யாரென்று உணர்வதற்கும் தொடர்பு என்ன? இதற்கு பொதுவாக சொன்னால், உன்னுடைய எண்ணமும் செயலும் சரி இல்லை என்பார்கள். ஒரு சிலர் நீ எதையும் அவநம்பிக்கையோடு செயல்படுகிறாய். அதனால்தான் இந்த துன்பம் என்பார்கள். இயல்பாக இருக்கும் சிலர், தங்களுக்குதாங்களே, என் தலையெழுத்து, என் விதி சரியில்லை என்பார்கள். ஆனால் உண்மை வேறுமாதிரியாக அமைந்திருக்கிறது.
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், ஒரு மனிதனுடைய இயல்பும், தன்மையும், குணமும் அவனுடைய கர்மா எனும் வினைப்பதிவை சார்ந்துதான் அமைகிறது என்கிறார், வேதாத்திரி மகரிஷி. அந்த கர்மா என்ற வினைப்பதிவுதான் அவனுக்குள்ளாக இருந்து செயலை தூண்டவும், அதை நிறைவேற்றமும் செய்கிறது. அவனுடைய மனம் ஒரு கருவிதான். ஆனால் ஏற்படும் விளைவு, நம் கையில் இல்லையே. அது இயற்கைதானே தீர்மானிக்கிறது. அதனால் அந்த விளைவுகளில் நமக்கும், நம் வாழ்வுக்கும் முரண்பட்டுவிடுகிறது. அப்படியான முரண்பாடுகள்தான் நமக்கு வாழ்வில் துன்பச்சிக்கலை உண்டுசெய்து நம்மை வருத்துகிறது.
எனவே துன்பச்சிக்கலை தீர்க்க / திருத்தி அமைக்க நமக்கு கிடைக்கும் வழி, தன்னை யாரென்று உணர்ந்த தெளிவு தான் உதவுகிறது.
வாழ்க வளமுடன்
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments