தண்ணீர் மற்றும் உணவு சாப்பிடுவதற்கு முன் காயகல்பம் செய்யலாமா?
Kayakalpa exercise before eat and drink |
நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்
உணவு உண்ணும் முன்பு, தண்ணீர் அருந்தும் முன்பு காயகல்பம் செய்வது ஏன்?
அதிலிருக்கும் சக்தி நமக்கு முழுதாக கிடைக்கும் 75% (அதிகமான வாக்கு)
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், பெரும்பாலான அன்பர்களின் கருத்து, உணவுக்கு முன், ஏதாவது அருந்துமுன், சாப்பிடும் முன் காயகல்பம் செய்தால், அப்பொருளில் இருக்கும் சக்தி முழுதாக கிடைக்கும் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இது உண்மைதானா? இல்லை.
ஏன்? அடுத்ததாக அன்பர்கள் தேர்ந்தெடுத்ததை கவனியுங்கள்.
அப்பொருளுக்கு தகுந்தபடி உடல் ஏற்றுக்கொள்ளும் 15% (சரியான வாக்கு)
இது சரிதானா என்று பார்க்கலாம். வேதாத்திரி மகரிஷி அடிக்கடி சொல்லுவதுபோல, நாம் சாப்பிடும் உணவுதான் உடலாக வந்திருக்கிறது என்பது உண்மைதான். அதாவது நேரடியாக இல்லாமல் அதன் சத்துக்களாக மாறியபிறகு உடலில் சேர்ந்து இன்னும் பெருக்கவோ, சமநிலைபடுத்தவோ செய்கிறது. ஆனால் சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேற மாட்டேன் என்கிறதே? அதற்கு காரணம், உடலில் ஏதேனும் குறைபாடு என்று நிச்சயமாக சொல்லலாம். சத்து உடலில் ஒட்டவில்லை என்பார்கள். மேலும் ஏதேனும் நோய் தன்மையும் இருக்கலாம்.
உணவில், உணவுப்பொருட்கள் இவற்றின் எல்லா சத்துக்களும் உடலில் சேரவேண்டும் என்ற அவசியமில்லை. அப்படி நினைத்து சாப்பிட்டு சாப்பிட்டுத்தான் உடலில் நோயையும் கூடவே சேர்த்து வைத்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்களா? உடலுக்கு தகுந்ததை பெறவும், தேவையில்லாததை விலக்கிடவும் உடலுக்கு பலம் அளிக்கவே காயகல்பம் செய்கிறோம் என்பதை புரிந்து கொள்க.
தண்ணீர் பருகும் பொழுது எதற்கு காயகல்பம்? உடலின் வெப்ப நிலையில் மாறுபாடு ஏற்படக்கூடாது அல்லவா? அதனால் செய்கிறோம். மற்றபடி தண்ணீரில் சில அடிப்படை உப்புக்கள் உண்டுதான்.
பெரும்பாலும் உணவை நாம் பரிசோதிக்க முடியாது. சத்துள்ளதா? இல்லையா என்பதும் தெரியாது. ஆனால் உடல் அறியும். உணவில் தவறென்றால், வயிறு கலக்கமாவதை நீங்கள் அறிவீர்கள் தானே? அத்தகைய தவறான உணவை, தெரியாமல் எடுத்துக்கொள்ள நேர்ந்தால் அங்கே, காயகல்பம் நிச்சயமாக உதவும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்படியானால், ‘அப்பொருளுக்கு தகுந்தபடி உடல் ஏற்றுக்கொள்ளும்’ என்ற கருத்துத்தான் சரியானது அல்லவா? இனியும் காயகல்பம் குறித்த சந்தேகம் இருந்தால் தகுந்த ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்க.
வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments