à®…à®°ுட்பேà®°ாà®±்றலின் அன்புக்குரல் கேட்டேன்.
ஆழ்ந்த தியான நிலையில் புலன்களைக் கடந்து, இப்பிரபஞ்சத்தைத் தாண்டி, விà®°ிந்து, எல்லையில்லாத சுத்த வெளியில் நிà®±்குà®®் போதுதான் à®…à®±ிவு, இறைநிலை, கடவுள் என்பதெல்லாà®®் ஒன்à®±ு தான் எனுà®®் உண்à®®ையை உணர்ந்தேன். நானே à®…à®±ிவாகவுà®®், அந்த இறை நிலையாகவுà®®் à®’à®°ே சமயத்தில் இருப்பதை உணர்ந்தேன். மனம் எல்லையற்à®± à®…à®®ைதியிலுà®®், ஆனந்தத்திலுà®®் à®®ிதக்கத் தொடங்கியது. à®’à®°ு புது ஒளி பிறந்தது.
அந்நிலையில் என் உள்ளத்துக்குள்ளிà®°ுந்து à®’à®°ு குரல் கேட்பதை உணர்ந்தேன், அது அந்த இறையாà®±்றலின் அன்புக் குரலே தான் என்பதைக் கண்டுகொண்டேன். பேà®°ாà®±்றல், பேà®°à®±ிவு என்à®± இரு தன்à®®ைகளைக் கொண்ட அந்த இறை ஆற்றலின் தன்னிà®±ுக்கச் சூà®´்ந்தழுத்துà®®் பேà®°ாà®±்றலே அணு à®®ுதல் அண்ட சராசரமாக விà®°ிந்துள்ளதையுà®®் அதன் இன்னொà®°ு தன்à®®ையான, à®…à®±ிவே இயக்க à®’à®´ுà®™்காகவுà®®் இருப்பதை அந்தக் குரல் எனக்கு உணர்த்தியது.
இந்த அனுபவத்தைத் தொடர்ந்து, பிறகு எப்பொà®´ுது இந்தப் பிரபஞ்சத்தை நினைத்தாலுà®®், பிரபஞ்சத்தின் எந்த à®’à®°ு பொà®°ுளை நினைக்குà®®் போதுà®®் à®…à®°ுட்பேà®°ாà®±்றலின் அன்புக் குரல் இன்னுà®®் ஒலிப்பதை என்னால் கேட்க à®®ுடிகிறது.
à®…à®°ுள்தந்தை வேதாத்திà®°ி மகரிà®·ி
0 Comments