வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 405votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
அன்பர்களே, தண்டுவட சுத்தி என்ற பயிற்சி எதற்காக செய்கிறோம் என்று தெரியுமா?
ஒவ்வொரு ஆதாரங்களிலும் தடை அகற்றிடும் 57% (சரியான / அதிக வாக்கு)
ஒரு ஆச்சரியமான நிலை, என்னவென்றால், இந்த தண்டுவட சுத்திக்கான வாக்கும், முந்தைய நாடி சுத்திக்கான வாக்கும் சம நிலையில் 57% பெற்றுள்ளது. எனவே இரண்டு நபர்களில் ஒருவர்தான் உண்மை உணர்ந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஏன்? அவர்களுக்கு சரியான விளக்கம் போய்ச் சேரவில்லையா, அவர் அதை கற்றுக் கொள்ளவில்லையா? என்பது தெரியவில்லை.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! தண்டுவட சுத்தி என்பது, சித்தர்கள் கண்டுபிடித்த ஓர் உக்தி. அதாவது தங்களுடைய யோகப் பயணத்தில், தடை எழாமல் இருக்கவும், தடை இருந்தால் அதை அகற்றவும் செய்யும் பயிற்சிதான் இந்த, தண்டுவட சுத்தி!
நாம் தவத்தில் குண்டலினி சக்தியை, மூலாதார மையத்தில் இருந்து, ஆக்கினைக்கு முதலில் ஏற்றி தவம் இயற்றுகிறோம். மூலாதார மையத்திற்கும், ஆக்கினைக்கும் இடையில், நான்கு ஆதாரங்கள் உண்டுதானே? நன்கு பயிற்சி இல்லாமலும், கற்றுக்கொண்டதை சரியாக செய்யாமலும், குண்டலினி எழுந்து உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். நாம் இக்காலத்தில் வேதாத்திரிய எளியமுறை யோகம் செய்கிறோம். அக்காலத்தில் மிகக் கடின முறை இருந்தது. அதனால் இந்த தண்டுவட சுத்தி பயிற்சியால், மூலாதாரம் முதல் ஆக்கினை வரையிலான பாதையை, தூய்மை செய்யவும், தடை அகற்றிடவும் முடியும். உடனடியாக ஆக்கினை தவம் செய்துவிடவும், சாந்திதவம் செய்யவும் உதவும். நல்லவாய்ப்பாக இக்காலத்திலும் உதவுகிறது என்பது உண்மையே!
எனவே இதுவரையிலும் இதை செய்யாதவர்கள் செய்து பழகிக் கொள்க. தவத்திற்கு முன்பாக 10 முறை தண்டுவட சுத்தி செய்தபிறகு எந்தத்தவம் இயற்றினாலும், அவர்கள் அந்த தவத்தில் உயர்வு பெறுவார்கள். நாடி சுத்தியும், தண்டுவட சுத்தியும் செய்யாமல் தவம் இயற்றலாமா? தாராளமாக இயற்றலாம், ஆனால் தவம் முழுமையடையாது. யாருக்கு அதீத ஆர்வமும், முயற்சியும் உள்ளதோ அப்படியான சிலருக்கே முழுமையாகும். ஆனாலும் எல்லோருமே தண்டுவட சுத்தி செய்துகொள்வது நல்லதே!
இனியும் நாடி சுத்தியும், தண்டுவட சுத்தியும் தவறவிட மாட்டீர்கள்தானே?!
வாழ்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments