ஒருநாள் எளியமுறை உடற்பயிற்சி செய்யமுடியாமல் போனால்தான் என்ன?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 534Votes/34Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, ஒருநாள் உங்களால் எளியமுறை உடற்பயிற்சி செய்யமுடியாமல் போனால் என்ன நினைப்பீர்கள்?
செய்யாமவிட்டதில் வருந்துவேன் இனி தொடர்வேன்75% (சரியான / அதிக வாக்கு)
அடடா, ஒரு நல்ல வாய்ப்பை இழந்துட்டேனே14% (சிறப்பு வாக்கு)
-
அன்பர்களே, எளியமுறை உடற்பயிற்சி என்பது குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் கொடை. பெயருக்கு ஏற்றபடியே, உடலை வருத்தாமல், மிகச்சரியாக ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. உடற்பயிற்சி செய்யும் நாட்களிலேயே அந்த உற்சாகத்தை நாம் பெற்று அனுபவிக்க முடியும்.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! எளியமுறை உடற்பயிற்சி, மனவளக்கலை யோகத்திற்கு மட்டுமல்ல, பொதுவாகவே உடலை, மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. எந்த நோய்தாக்கமும் இல்லாத நிலையில், உடலை பாதுகாக்கவும், வந்த நோயின் தீவிரம் குறையவும் பலன் அளிக்கிறது. சில நோய்களுக்கும், வலிகளுக்கும் தீர்வாகவும் அமைகிறது என்பது உண்மை.
அறுவை சிகிச்சை செய்தவர்களும், உடல் பாதிப்பு உள்ளோரும் கூட, மிக எளிமையாக, எந்த தொந்தரவும் மேற்கொண்டு ஏற்படுத்திக்கொள்ளாமல், தகுந்த ஆலோசனையோடு, இந்த எளியமுறை உடற்பயிற்சியை கற்றுக்கொண்டு செய்துவரலாம், அதில் எந்த சந்தேகமும் இல்லை.
குரு மகான் வேதாத்திரி மகரிசி, ‘சமைக்கின்ற பாத்திரம் தினமும் சுத்தம் செய்து, மறுபடி அதை பயன்படுத்திக்கொள்வது போலவே, உடலையும் உடற்பயிற்சியால் சுத்தம் செய்துகொள்ள வேண்டியது அவசியம்’ என்கிறார். ஆனால் மக்களின் வாழும் சூழல், பொருள்தேடுதலில் இருக்கின்ற அவசரமான நிலை இவற்றால், தினமும் உடற்பயிற்சி என்பது, அவசியமில்லாத ஒன்று என்பதாக மாறிவிட்டது. இதில் மனவளக்கலை அன்பர்களும் சிக்கிக் கொள்கின்றனர். ஆனாலும் கற்றதை மறக்காமல், செய்துவருவதை ஏற்கத்தான் வேண்டும். அவர்களின் பதில்தான் இங்கே வாக்காக வந்திருக்கிறது. ஒருநாள் தவறிவிட்டால் வருத்தம் எழுமளவிற்கு அதில் ஆர்வமாக இருப்போர் ஒருசிலரே. தவிர்க்கமுடியாத சூழலில் தவறிவிட்டால், மறுபடி இத்தவறு செய்யமாட்டேன் என்று உறுதி கொள்க.
அன்பர்களே, நம்முடைய வாழ்வில், ஒரு நொடி என்பது நம்மிடம் இருந்து போய்விட்டால், மீண்டும் வருவதில்லை. அப்படியாக, உங்களை, மனதை, உடலை உற்சாகம் செய்துகொள்ள, வலுவாக்க, நோய்தடுப்புக்காக கிடைத்த வாய்ப்பு ‘எளியமுறை உடற்பயிற்சி' ஆகும். தினமும் தவறாது செய்துவருவேன் என்று, சங்கற்பம் ஏற்று செய்துவாருங்கள். வாழ்நாள் முழுவதும் பலனைப் பெறுங்கள்!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
-
0 Comments