வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 282Votes/21Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, வாழ்த்து என்பதை எதிர்பார்த்து வாழ்த்துவது நன்மை தருமா?
விருப்பு வெறுப்பு இன்றி இயல்பாக வாழ்த்தலாம் 75% (சரியான / அதிக வாக்கு)
இயற்கையின் விருப்பத்தில் விட்டுவிடவேண்டும் 10% (சிறப்பு வாக்கு)
-
அன்பர்களே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் ‘வாழ்க வளமுடன்’ என்ற வாழ்த்துத்தான் வாழ்த்துகளில் ஒரு மறுமலர்ச்சியை தந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை. சமஸ்கிருதம், வடமொழி என்று அர்த்தம் எளிதில், புரிந்து கொள்ளமுடியாத நிலையில் இருந்த வாழ்த்துக்கள், எளிமையாக ‘வாழ்க வளமுடன்’ என்று எல்லாமக்களுக்கும் போய்ச் சேர்ந்தது.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! வாழ்த்து எனும்பொழுது அது தன் வாழ்த்தாகவும், பிறரை வாழ்த்துவதாகவும் இருக்கிறது. பெரும்பாலும் நாம் காண்கின்ற வாழ்த்து, ஏதேனும் பொது தன்மையோடு, தனிச்சிறப்பு பெறுவதாக உணர முடிவதில்லை. என்றாலும்கூட அக்காலத்தில் இருந்து, பெரியவர்கள், ஞானிகள், மகான்கள் வார்த்தையால் வாழ்த்துவதும், மௌனமாக வாழ்த்துவதும் இருந்துவருகிறது.
ஆனால் ‘வாழ்க வளமுடன்’என்று சொல்லும் பொழுது, ஒரே சமயத்தில் தன் வாழ்த்தாகவும், பிறரை வாழ்த்துவதாகவும் அமைந்துவிடுவதை நாம் அறியலாம்! இந்த உண்மைபுரியாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். வளமுடன் அல்ல வளத்துடன் என்றும் சொல்லுவார்கள். வளம்+உடன்=வளமுடன் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடுவோம்.
இத்தகைய வாழ்த்தை, சங்கல்பமாகவும் சொல்லலாம் என்பதும் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாக்கு! எனவே ‘வாழ்க வளமுடன்’ மட்டுமல்லாது நாமாகவும் வார்த்தைகளின் வழியாக, சங்கற்பம் இயற்றிக்கொள்ள முடியும். அதன்வழியாக, பிரபஞ்ச சக்தியான, வான்காந்த ஆற்றலோடு தொடர்பு கொண்டு பெறவும் முடியும்.
ஆனால் இதில் ஒரு நிலை உள்ளது, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘விரும்பியது கிடைக்கும் என்பது இல்லை, எது தேவையோ அது கிடைக்கும்’ என்று சொல்லுவார். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, வாழ்த்து என்பதை எதிர்பார்த்து வாழ்த்துவது நன்மை தருமா? என்ற கேள்விக்கு சரியான விடை, ‘விருப்பு வெறுப்பு இன்றி இயல்பாக வாழ்த்தலாம்' என்பதுதான். மேலும் சிறப்பாக, அதை ‘இயற்கையின் விருப்பத்தில் விட்டுவிடவேண்டும்' என்பதாகும்.
ஆனாலும் கூட நிச்சயமாக உங்களுக்கு சந்தேகம் இருக்கும், அதை நீங்கள், வேதாத்திரிய சேனல் வழியாக, கேள்விகள் கேட்டு உண்மை அறிந்து கொள்ளலாம்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments