தன்னிலை விளக்கம். ஒரு சில நொடியில் கிடைத்துவிடுமா?
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே தன்னிலை விளக்கம். ஒரு சில நொடியில் கிடைத்துவிடும் என்கிறார்களே உண்மையா?
பல ஆண்டுகள் கடுமையாக தவம் செய்தால் மட்டுமே 61% (சரியான / அதிக வாக்கு)
ஆம் ஆனால் இதுவரையில் எனக்கு கிட்டவில்லையே 22% (சிறப்பு வாக்கு)
-
அன்பர்களே, உலகில் பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்றவகையில் ‘தன்னையறிதல்’ முக்கியமானது. உண்மை என்னவென்றால், அதற்காகத்தான் பிறவியே எடுத்தோம். ஆனால் நாம் அதைத்தவிட மற்றலெல்லாமே செய்து முடிக்கிறோம். நல்லவேளையாக குரு மகான் வேதாத்திரி மகரிஷி வந்து அந்த வழியை எளிமையாக்கி நமக்கு தந்தார் என்பது உண்மைதானே?!
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! பிறப்பின் கடமை, பிறப்பின் நோக்கம் இவற்றை அறிந்து, தெய்வீகம் என்பது எது? இயற்கை என்பது எது? என்பதையும் உணர்ந்து தெளியும் நிலையை ‘தன்னிலை விளக்கம்’ என்றும் சொல்லுவதுண்டு. முக்கியமாக இது குண்டலினி யோகத்தின் வழியாக அல்லது மனவளக்கலை வழியாகவே பெறமுடியும். யாரோ ஒரு சிலருக்கு தெய்வீகத்தால், உணர்த்தப்படுவதும் உண்டு. அது பக்தி வழியிலும் நிகழும் என்பது உண்டுதான். ஆனால் நீண்ட காலம் ஆகலாம்!
பொதுவாக இந்த ‘தன்னிலை விளக்கம்’ நொடியில் கிடைத்துவிடும் என்று சொல்லுகிறார்களே? அது உண்மையா என்று கேட்டால், ஆம் கிடைக்கும் ஆனால்... அதற்கு பல ஆண்டுகள் கடுமையாக தவம் செய்தால் மட்டுமே’ என்பது கூடுதல் உண்மையாகும்.
ஒரு ஞானி சொல்வதாக நான் அறிகிறேன், ‘குதிரையில் ஏறுவதற்கு, ஒரு காலை நிறுத்தி, மறுகாலை அந்தப்பக்கம் போடுவதற்குள் நிகழ்ந்துவிடும்’ என்று சொல்கிறார். உண்மையாக இந்த நொடிப்பொழுதில் நிகழ்வதற்கு, மிகுந்த தேர்ச்சியும், ஆர்வமும், முயற்சியும், ஆராய்ச்சியும் பல ஆண்டுகாலம் செய்திருக்க வேண்டும் என்பது மறைக்கப்பட்ட உண்மை. அதை அவரவர்கள் தங்களுடைய வாழ்நாளில், நடைமுறைக்கு கொண்டுவரும் பொழுதுதான் அறியமுடியும்.
ஒரு வருத்தமான விசயம் என்னவென்றால், இப்படி பல ஆண்டுக்காலம், தொடர்ந்து பயணித்தாலும், இன்னும் ‘தன்னிலை விளக்கம்’ கிடைக்கவில்லையே என வருந்துவதும் உண்டு. அதற்கு சில கர்ம வினைகளின் தாக்கம் உண்டு. அவற்றை அறிந்து திருத்தி அமைத்துக்கொண்டால், வெற்றியும் கிடைக்கும், தன்னிலை விளக்கமும் உடனே கிடைக்கும்!
தொடர்ந்து பயணியுங்கள், தன்னிலை விளக்கம் பெறுவோம்!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments