நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
எளியமுறை உடற்பயிற்சி தினமும் செய்துவருகிறோம் என்றால் எப்படி அறிந்து கொள்ளலாம்?
நாள் முழுவதும் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும் 64% (சரியான/ அதிக வாக்கு)
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், தினமும் அதிகாலை எழுவது நல்லது, அதாவது தானாகவே உடல் தூக்கம் விடுத்து, விழிப்பு வருகிறது என்று அர்த்தமாகிறது. ஏற்கனவே உடற்பயிற்சி வழியாக உடலை சீர் செய்தவர்களுக்கும், பகல், இரவு பொழுதுகளில் உடலை கெடுக்காதவர்களுக்கும் நல்ல அனுபவமாக கிடைக்கும். ஆனால் பெரும்பாலோருக்கு பிரச்சனை இங்கேதான் ஆரம்பிக்கிறது. காலை 8 மணிக்கு விழித்தால் கூட, இன்னும் கொஞ்சம் தூங்கலாமா? என்றுதான் நினைப்பார்கள். வாட்சிலும், மொபைலிலும் அந்த 8 மணிக்குத்தான் அலாரம் வைப்பார்கள். ஒலி எழுப்பினால் அதையும் கொஞ்ச நேரம் அமைதிபட்டுத்துவார்களே தவிர எழமாட்டார்கள். எழுந்தாலும் சோம்பலாகவே இருப்பார்கள். அந்த அளவுக்கு உடலும், மனமும் கெட்டிருக்கிறது என்று சொன்னால் இல்லவே இல்லை என்பார்கள்.
உடலுக்கென்று இயற்கை ஒரு கடிகாரத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது. அதை சீர்கெடாமல் பார்த்துக்கொள்வது நம் கடமை. ஒருவேளை கெட்டுவிட்டால் அதை தகுந்த முறையில் சரி செய்ய வேண்டும். அதுதான் உடற்பயிற்சி. நமக்கு கிடைத்திருக்கிற வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி, முழுமையானது, நிறைவானது. எந்த வகையிலும் உடலை வருத்தத் தேவையில்லாத பயிற்சி முறைகள். எல்லோரும் செய்யலாம்.
இங்கே, நாள் முழுவதும் என்பது அதிகாலை 4.30 முதல் 9.30 வரை எனலாம். 9.31 முதல் நாம் தூங்கிவிட தயாராவோம். இதுதான் இப்போதைய இயல்பான நடைமுறை. ஆனால் இதை சிதைத்துவிட்டு, 8 மணிக்கு எழுவதும் தூக்கத்தைக் கெடுத்து பலமணி நேரம் இயங்குவது உடலையும் மனதையும் கெடுக்கும். எனவே இப்பழக்கத்தை மாற்றிக்கொள்க. இரவுப்பணி பார்ப்பவர்களை ஒன்றும் சொல்லமுடிவதில்லை.
எளியமுறை உடற்பயிற்சி நம்மை இயற்கையோடு இணைக்கிறது. உடல் உறுப்புக்கள் அதனதன் இயல்பில் இயங்க வழி செய்கிறது. இயற்கை கடிகாரத்தோடு ஒன்றி இணைய பழக்கப்படுத்துகிறது. அதன்வழியே உடலும் மனமும் சுறுசுறுப்பாகிறது. அது நாள் முழுதும் தொடர்கிறது. அந்த அனுபவத்தை நீங்கள் உணர்ந்து, இன்னமும் தொடர்ந்து செய்து பலன் பெற வாழ்த்தி மகிழ்கிறோம்.
முக்கியமாக, வருமுன் காப்பதுதான் என்றும் சிறப்பு, உடல் நோய்க்கும், உறுப்புக்களின் நோய்க்கும் இடம் கொடுத்துவிட்டு, சரிசெய்ய வேண்டுமே என்று துன்பப்படுவதை விட, உடலை உன்னதமாக வைத்துக்கொள்வதே நல்லது. உடல் சிறப்பானால் மனதின் தன்மையும் சிறப்பாகும்!
Easy யை கெடுத்துக்கொண்டால் Disease
வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments