வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 437votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, வேதாத்திரிய தவமுடிவில், ஓம் ஷாந்திக்கு பதிலாக அமைதி என்று சொல்லுவது ஏன் தெரியுமா?
வேதாத்திரியம் எல்லோருக்கும் பொது என்ற கருத்தில் 65% (சரியான / அதிக வாக்கு)
-
அந்தக்காலத்தில் இருந்து நம் நாட்டில், ஒவ்வொருவடைய மொழி, பேச்சு, வழக்கம், பழக்கம் இவற்றில் ஒரு பொதுத்தன்மை இருந்தது. பேதங்களற்ற நிலையும், பிற மொழி வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளும் பரந்த மன நிலையும் இருந்தது. நான் இந்த மொழி பேசுபவர், நீ இந்த மொழி பேசுபவர் என்ற பிரிவினை இன்றி கலந்துரையாடினர், எழுதினர், அதை பகிர்ந்தும் கொண்டனர். சிலர் அவற்றை மொழிபெயர்த்தும் படைப்புக்களாக தந்தனர். அதுபோலவே யோக மார்க்கத்திலும் தமிழும் வடமொழிகளும் கலந்தே இருந்தன. இதற்கு சான்றாக, பழங்கால நூல்களும், செப்பு பட்டயங்களும், கல்வெட்டுக்களும் உள்ளன.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! வடமொழி சொல்லான ஷாந்தி என்ற வார்த்தை, ‘அமைதியும் நிறைவும் முழுமையும்’ என்ற அர்த்தத்தில் யோகத்தில் சொல்லப்பட்டு வந்தது. ஒருவருக்கு ஆசி வழங்கும் போதுகூட ‘ஷாந்தி’ என்று சொல்லுவது வழக்கம். ஒருவார்த்தை பல ஆண்டுக்காலமாக சொல்லப்பட்டு வந்தால், அது மந்திரமாகவும், வான்காந்தத்தில் ஏற்புடைய ஒன்றாகவும் மாறிவிடும். அந்தவகையில்தான், வேதாத்திரி மகரிஷி, தவ முடிவில் ‘ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி’ என்று முடிப்பதாக அமைத்தார். அதுவே தொடர்ந்தும் வந்தது.
வேதாத்திரி மகரிஷி உலக அளவில், எல்லோருக்கும் இதை பாடத்திட்டமாக கொண்டு வந்தபொழுது, நம் நாட்டிலேயே ‘ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி’ ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே, அதே அர்தத்தை, தமிழ் மொழி தரும் வகையில் ‘அமைதி, அமைதி, அமைதி’ என்று மாற்றம் செய்யப்பட்டது. மேலும், வேதாத்திரியம் உலகமக்கள் அனைவருக்கும் பொது என்ற கருத்திற்கும் போதுமானதாக இருந்தது. தற்காலத்தில் இதுவம் மந்திர வார்த்தையாக மாறிவருகிறது என்பதும் உண்மையே.
சில மாறுபட்ட கருத்துகள் எழுந்தாலும் கூட, வேதாத்திரி மகரிஷியும் , தலைமையும் ஏற்றுக்கொண்ட மாற்றம் என்பதை அறிக. எனவே அதுகுறித்த வாதங்கள் இனி தேவையில்லை.
அப்படியானால், ‘ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி’ சொல்லக்கூடாதா? என்று கேட்டால், நீங்கள் தனியாக, குழுவாக சொல்லுவதில் தவறில்லை. ஆனால் அதை சொல்லுவதன் வழியாக, மீண்டும் ஒரு பிரச்சனை எழக்கூடாது அல்லவா? அதனால், ‘அமைதி, அமைதி, அமைதி’ அமைதியானது!
வாழ்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments