Ticker

6/recent/ticker-posts

Need to choose same place for practice at home? Why?

காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவம் இவற்றை செய்வதற்கு ஒரே இடத்தை தேர்வு செய்வது ஏன்?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 336 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவம் இவற்றை செய்வதற்கு ஒரே இடத்தை தேர்வு செய்வது ஏன்?

உடலும் மனமும் இடத்தை பொருந்திக்கொள்ளும் 20% (சரியான வாக்கு)

அந்த இடத்தில் நமக்கு தேவையான சக்திஓட்டம் வரும் 66% (அதிக வாக்கு)

-

கற்றுக்கொண்ட எந்த ஒரு பயிற்சியையும், எங்கே கற்றோமோ, அங்கே செய்வதில் நாம் சிறப்பாக உணர்வோம் என்பதே உண்மை. அதுபோலவே வேதாத்திரிய யோகம் கற்பதும், மனவளக்கலை மன்றங்களிலேயே செய்து பழகுவதும் சிறப்பானதே. ஆனால் வீட்டில் நாம் தனியே பயிற்சி செய்தால் எப்படி இடத்தை தேர்வு செய்வது? ஏன் ஒரெ இடத்தை தேர்ந்தெடுப்பது? என்ற விளக்கத்தை காணவே இந்த வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது.


இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய வேதாத்திரிய யோகத்தில், காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவம் இவற்றை கற்றுக்கொண்டு, மனவளக்கலை மன்றத்தில் செய்து பழகிவிட்டு, பிறகு வீட்டில் செய்கிறோம். எப்போதுமே நம் வீடு நமக்கு ஓர் நிறைவைத்தருவது தானே?! அந்த வீட்டிலே, தினம் ஒரு இடம் என்று பயிற்சிகளை மாற்றி செய்திட முடியுமா? சிலர் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருபவர்கள் அப்படி செய்யலாம். ஆனால் அது ஒரு நிறைவை, முழுமையை தராது. 

தனி இடம் பிரச்சனை இருந்தால், எல்லோருக்கும் முன்பாகவே, தான் மட்டும் அதிகாலை எழுந்து எல்லா பயிற்சியும், தவமும் செய்து பழகிக்கொள்ள வேண்டும். என்றாலும்கூட ஓரே அறையில், இடத்தில் செய்துவருவேன் என்று முடிவெடுப்பது மிகச் சிறப்பு. ஏன் தெரியுமா?

ஒரே அறை, ஒரே இடம் என்கிற பொழுது, அந்த இடத்தை, உங்கள் உடலும், மனமும் ஏற்று பொருந்திக் கொள்கிறது. ஒரு திருப்தியை உண்டாக்குகிறது. தினம் தினம் அதே இடத்தில் செய்துவந்தால், அங்கே ஒரு சக்தி ஓட்டமும், நல்ல அலைகளும் நிரம்பப்பெறுகிறது. சரியாக செய்யவேண்டும், தொடர்ந்து செய்யவேண்டும் என்ற ஆர்வம் உண்டாக்குகிறது. அது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் இவர்களுக்கும்கூட ஆர்வத்தை தூண்டும். அவர்களும், மனவளக்கலையில் இணைந்து பயிற்சி பெற வாய்ப்பு உருவாகிடும் என்பதே உண்மை! எனவே, எப்படியாவது ஒரே இடம் என்ற நிலையை, உங்கள் இல்லத்தில் உருவாக்கிக் கொண்டு, பயிற்சி, தவங்களை செய்து பழகி உயர்வடையுங்கள்.

வாழ்க வளமுடன்! 

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments