வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 429 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, ஒரு நாளைக்கு எத்தனை முறை தவம் செய்யலாம் என்ற கணக்கு இருக்கிறதா?
காலை மாலை இரண்டு வேளைகள் தவம் போதும் 65% (சரியான /அதிக வாக்கு)
-
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய வேதாத்திரிய யோகத்தின் வழியாக, அதிகாலை தவம் செய்வதும், மாலை தவம் செய்வதும் பொதுவான வழிமுறை. மற்றபடி ஒரு நாளைக்கு இத்தமுறை தவம் செய்யவேண்டும் என்ற கட்டாய வழிமுறை தரப்படவில்லை.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! ஆரம்பகால தவசாதகர்கள், ஆக்கினை தவ தீட்சை பெற்றவுடன், நன்கு தவம் செய்யவேண்டும் என்று ஆசிரியர்களால் அறிவுறுத்தப்படுவார்கள். அது உண்மைதான். அடிக்கடியாகவோ, தொடர்ந்தோ ஆக்கினை தவம் செய்து வந்தால்தான், குண்டலினி சக்தியின் திணிவு, ஆக்கினையில் கிடைக்கும். இல்லையேல் தீட்சையின் பலனும், நம் யோக பயணமும் தடைபடும்.
அதிகாலை, மாலை என்ற இரண்டு தவ நேரங்கள் அமைத்துக்கொண்டால் போதுமானது. மதியம் அல்லது இரவில், தவம் செய்வது ஒருவகை சோர்வைத் தரலாம். மதியம் தவம் செய்தால், அது உணவு செரிமான பிரச்சனை உண்டாகலாம். இரவில் தவம் செய்வது, தூக்கத்தை கெடுக்கலாம். மேலும் ஆர்வத்தில், ஒரு நாளைக்கு ஐந்து முறை, ஆறுமுறை என்று அடுக்கிக்கொண்டே போகவேண்டிய அவசியமில்லை. ஒரு நாளைக்கு ஒரு தவம் செய்தாலும் கூட, அதில் எந்த அளவுக்கு மனம் ஒன்றி செய்கிறீர்கள் என்பதும், அதில் எந்த அளவுக்கு ஆராய்ச்சியும், முன்னேற்றமும் கிடைக்கிறது என்பதும் முக்கியம்.
அதுபோலவே ஒரு தவத்திற்கான தகுந்த நேரம் மட்டும் செய்தால் போதும், நீண்ட நேரம் தவம் செய்வதும் தேவையில்லை. இன்றைக்கு தவம் செய்ததால் எனக்கு என்ன விளக்கம் கிடைத்திருக்கிறது? என்ற கேள்வியை, உங்களுக்குள்ளாக கேட்டு ஆராய்ந்து பாருங்கள். நல்ல மாற்றத்தினை பெறுவீர்கள். அடுத்தடுத்த தவமும் சிறப்பாக அமையும் என்பது உறுதி.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments