Ticker

6/recent/ticker-posts

Do you know how we getting the problems in our lives?

வாழ்வில் பிரச்சனை என்பது எப்படி உண்டாகிறது? என்றால் உங்கள் பதில்?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 369Votes/22Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, வாழ்வில் பிரச்சனை என்பது எப்படி உண்டாகிறது? என்றால் உங்கள் பதில்?

நாம் தான் நம் வாழ்வில் உண்டாக்கிக் கொள்கிறோம் 44% (சரியான  வாக்கு)

அவர்வர் பெற்ற கர்ம வினைப்பதிவுகளால் வருகிறது 78% (அதிக வாக்கு)

-

அன்பர்களே, உலகில் வாழும் பெரும்பாலன மக்களுக்கு பிரச்சனை உள்ளது என்பது வழக்கமான ஒன்றாக, வாழ்வின் அனுபவமாகவும் இருக்கிறது. ஆனால் மனிதன், இந்த உலகில் இன்பமாக வாழ்வே பிறந்தான் என்று சொல்லப்படுகிறது.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! வாழ்வில் பிரச்சனை என்பது எப்படி உண்டாகிறது? என்ற கேள்வியை வேறுவிதமாக நாம் இங்கே கேட்டு அதற்கான விளக்கம் பெற்றிருக்கிறோம் என்றாலும் கூட, இன்று வேறுவிதமாகவும் நாம் உண்மை விளக்கம் பெறுவோம் என்பதற்காக மீண்டும் கேட்கப்பட்டது.

பிரச்சனை எந்த வடிவத்திலும் நமக்கு எழுகிறது என்பது உண்மையே. முற்றாக தவிர்த்தால் கூட அதுவும் ஒரு பிரச்சனை என்றாகிவிடுகிறது. யோகத்திலும், உண்மை விளக்கத்திலும், மகான்கள், ஞானிகள் அருகில் இருக்கிற அன்பர்களுக்கும், பக்தியில் திளைத்தவர்களுக்கும் ‘கர்மா’ இருப்பதால்தான் இந்த பிரச்சனைகளும், அதனால் துன்பமும் வருகிறது என்பது தெளிவாக தெரியும். எனவே ‘கர்மா’ என்று சொல்லுவது ஒரு பொதுத்தன்மையாக மாறிவிடுகிறது. 

என்றாலும் கூட, அந்த ‘கர்மா’ எப்படி? எவ்வகையில்? எவ்வாறு? பிரச்சனையாக மாற்றம்பெற்று நம்மை வருத்துகிறது என்பதில் குழப்பமாகவே இருப்பார்கள். மேலும் இந்த கர்மா’குறித்து தெரியாதவர்களும்,  தெரிந்தாலும் அதை உதாசீனம் செய்பவர்களும் நம்மோடு வாழ்கிறார்களே?! அவர்களுக்கு பிரச்சனையின் உண்மை தெரியவேண்டாமா? 

பிரச்சனையின் முலம், ஆணிவேர் ‘கர்மா’ என்ற ‘வினைப்பதிவு’ தான். இதில் எந்தவித ஐயமும் நமக்கு தேவையில்லை. ஆனால், அந்த கர்மாவின் வழியில், நாம் தான் நம் வாழ்வில் உண்டாக்கிக் கொள்கிறோம் என்பதே உண்மையாகிறது. இங்கே நாம் ‘கர்மா’ என்று சொல்லவேண்டியதே இல்லை. இதுதான் கர்மயோகம் என்ற நிலைபாடாக வாழவேண்டிய வழியை நமக்குத் தருகிறது. குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்ன, விழிப்புணர்வாக வாழ்ந்து தன்னை திருத்திக்கொள்ளுதல் என்பதும் இதுதான்!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments