ஏதேனும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதும் ஆக்கினை, துரியத்தில் நினைவை செலுத்துவது உண்டா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 310 Votes/35 Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, ஏதேனும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதும் ஆக்கினை, துரியத்தில் நினைவை செலுத்துவது உண்டா?
சிலசமயம் அப்படி நினைவை செலுத்துவேன் 55% (சரியான / அதிக வாக்கு)
ஏதாவது நேரங்களில் தானாக அமையும் 32% (சிறப்பு வாக்கு)
-
அன்பர்களே, யோகம் வழியாக, நான் யார்? என்ற கேள்விக்கு விடை தேடுவதுதான் நம்முடைய பிறப்பின் நோக்கம். அந்த நோக்கத்திற்கு மிகச்சரியான குருவை அடைவது மிக அரிது. அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு ஒருவர்தான் உயர்வார் என்று சொல்லுவதுண்டு. ஏனென்றால் அவ்வளவு கடினமான பயிற்சிகள் இருந்தகாலம் அது.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! யோகத்தில் இணைவதற்கே பல ஆண்டுகள், குருவின் ஆசிக்காக தொண்டு செய்ய வேண்டும். திட்சை பெற தகுதி பெறவும் பல ஆண்டுகள் ஆகும். தீட்சை பெற்றாலும் கூட, ஆக்கினை தவம் செய்வதறு பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். ஆனால் சித்தர்களின் மகத்தான ஆராய்ச்சியில், அந்த கஷ்டங்கள் எல்லாம் நீக்கி, தொட்டு உயர்த்தும் தீட்சை முறை என எளிமையாகிவிட்டது. அதுதான் நாம், நம்முடைய குருமகான் வேதாத்திரி மகரிஷியின் மூலம், மனவளக்கலையில் பெறுகிறோம். மிகக்குறுகிய காலத்திலேயே, ஆக்கினை, சாந்தி, துரியம், துரியாதீதம் என்று கற்றுக் கொள்கிறோம்.
எனினும் முக்கியமாக, நம்முடைய முயற்சி, ஆர்வம், ஆராய்ச்சி, செயல்முறை தேவைப்படுகிறது. இதில் நாம் பயணித்துக்கொண்டே இருந்தால் ‘தன்னிலையறிதல்’ தானாக அமையும் என்பதே உண்மை.
பயிற்சி காலங்களிலும், அது முடிந்து நாமாக தவம் இயற்றும் காலங்களிலும், ஏதேனும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதும் ஆக்கினை, துரியத்தில் நினைவை செலுத்துவது நல்லது தான். அது அடிக்கடி நிகழ்ந்தால், நம் தவ ஆராய்ச்சி கூடுதல் ஆகும் என்பதே உண்மை. சிலவேளைகளில், நாம் நினைக்கமால், தானாகவே ஆக்கினை, துரியத்தில் ஓர் அழுத்தம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அந்த வேளைகளிலும் சில நொடிகள், சில நிமிடங்கள் மனதை அங்கே நிறுத்தி கவனிக்கலாம்.
ஆனாலும் உங்கள் வழக்கமான வேலைகளை, பணிகளை கெடுத்துக் கொள்ளாத விழிப்புணர்வும் வேண்டும் என்பதை மறவாதீர்கள். இதை தவமாக செய்யாமல், சில நொடிகள் அங்கே நினைவை செலுத்தி, பிறகு ‘சாந்தி’ நிலைக்கு வந்துவிட வேண்டும் என்பதே உண்மை.
சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் -வேதாத்திரிய யோகவழி வாட்சப்குழு - வழியாக கேட்கலாம்!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments