Ticker

    Loading......

Have you do blessing for the Rain on your meditation?

அன்பர்களே, தனியாக தவம் செய்யும் பொழுதும், மழை வாழ்த்து சொல்லுவீர்களா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 332 Votes/18 Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, தனியாக தவம் செய்யும் பொழுதும், மழை வாழ்த்து சொல்லுவீர்களா?

வழக்கம்போல மழைவாழ்த்து சொல்வேன் 64% (சரியான / அதிக வாக்கு)

-

அன்பர்களே, ஒரு நாளில் நாம் இயற்றுகின்ற தவம் மிகச் சிறப்பானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்மோடு இருக்கும் பலர், அதற்கான நேரம் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும்தானே?! அப்படி கிடைக்கும் வாய்ப்பில் தவம் இயற்றி நமக்கும், இந்த உலகுக்கும் நன்மை தரதக்கதான சங்கல்பம் செய்துகொள்ளலாம் அல்லவா?

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! நாம் வேதாத்திரிய தவங்கள் முடிவில், அந்த நிறைவான மனநிலையில், உலகநல வேட்பு, மழைவாழ்த்து, இரண்டொழுக்க பண்பாடு ஆகியன சங்கல்பமாக சொல்லுவோம். பெரும்பாலான மனவளக்கலை மன்ற கூட்டு தவங்களில் உண்டு. 

ஆனால், நாம் தனியாக தவம் இயற்றினால் இதெல்லாம் சொல்லவேண்டியதில்லை என்றும், அதற்கான அவசியம் இல்லை என்றும் சிலர் நினைக்கிறார்கள். நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி எப்போதும், என்றும், எந்த தவத்தின் நிறைவிலும் சொல்லும்படிதான் அவற்றை அமைத்திருக்கிறார்.

தனக்கான, தன் உயர்வு, தன் குடும்ப உயர்வு சங்கல்பம் செய்வதோடு, உலக சமுதாயம் பொருட்டும் சங்கல்பம் செய்வது நம் கடமை. அந்த சமுதாயத்தை விட்டு விலகி நாம் தனித்து இல்லையே. இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

எனவே, இன்றிலிருந்து நீங்கள் தனியே இயற்றுகின்ற தவ முடிவிலும், மழை வாழ்த்து சொல்லலாம். நீங்களும், நீங்கள் இணைந்துள்ள இந்த சமுதாயமும் பயன்பெற அது உதவும்! இனி உங்கள் தவ நிறைவில் ‘மழை வாழ்த்து’ உண்டுதானே?!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments