குரு பூர்ணிமா நாளில் குருவை நினைந்து வணக்கம் செய்யவேண்டும்!
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 253 Votes/17 Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, குரு பூர்ணிமா நாளில் குருவை நினைந்து தவம் இயற்றி மகிழ்ந்தீர்களா?
இல்லத்தில் நான் தவம் இயற்றி போற்றினேன் 40% (அதிக வாக்கு)
கூட்டுத்தவம் இயற்றி குருவணக்கம் செய்தோம் 19% (சிறப்பு வாக்கு)
தவம் செய்ய முடியலை ஆன வாழ்த்து சொன்னேன் 17% (சிறப்பு வாக்கு)
-
அன்பர்களே, ஓவ்வொரு ஆண்டும், ஜூலை மூன்றாம் தேதி, குரு பூர்ணிமா என்ற சிறப்பு நாளாக கொண்டப்படுகிறது. அக்காலம் முதலே குரு பூர்ணிமா, குருவுக்கு வணக்கம் செலுத்தும் நாள் என்பது உண்டு, இப்பொழுது எல்லா மக்களும் தங்கள் குருவுக்கான சிறப்பு நாளாக ஏற்றுக்கொண்டார்கள்!
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! குரு பூர்ணிமா என்ற சிறப்பு நாளுக்கு, வழக்கம் போல கதைகள் உண்டு. அதில் உள்ள கருத்தை அறிய அக்கதைகளை கேட்கலாம் தவறில்லை. ஆதி சிவன் என்று அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி, தெற்குநோக்கி அமர்ந்திருந்த குரு என்பது அர்த்தமாகிறது. அவர், யோக நிஷ்டை கலைந்து, அந்த யோகத்தை 7 ரிஷிகளுக்கு, அவர்களை சீடர்களாக ஏற்று பகிர்ந்து, பயிற்றுவித்து, அவர்களை உய்வித்த நாள்தான், குரு பூர்ணிமா, குருவை வணங்கி வணக்கம் செலுத்தும் நாள் என்கிறார்கள்!
குருவின் நினைவு எப்போதும் நமக்கு உயர்வு அளிக்கும் என்பதை, மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திருமூலர் எனும் மகாமுனிவர், தன் திருமந்திரம் எனும் நூலில் எழுதியுள்ளார்.
மனவளக்கலையில் யோகம் வழியாக, தன்னையறிதலுக்கு தயாராகும் நமக்கு குரு, மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களே ஆகும். எனவே நாம் அவரை, இந்த குரு பூர்ணிமா நாளில், பௌர்ணமி நிலவு போல பிரகாசிக்கும் அருளாற்றை பெற விரும்பி வணக்கம் செலுத்துவோம். அதைத்தான் இங்கே வாக்கெடுப்பில் கேட்டிருந்தோம். சிலர் அந்த சிறப்பு நாளை, வழக்கமான பொருளியல் உலக கடமைகளில் மறந்தே விட்டார்கள் என்பது வருத்தமே.
ஆனாலும் மனவளக்கலை மன்றத்தில் இருப்பவர்கள் கூட்டுத்தவம் இயற்றி, வணக்கம் செலுத்தியிருக்கிறார்கள். சிலர் வீட்டிலேயே தனியே தவம் இயற்றி, குரு வணக்கம் செய்திருக்கிறார்கள். சிலர் தவம் இயற்ற முடியாமல், குருவை நினைந்து வாழ்த்து சொல்லி மகிழ்ந்திருக்கிறார்கள்.
குரு நினைவு உங்களை உயர்த்தும், வாழ்வை சிறப்பிக்கும் என்பதை மறவாதீர். குரு வணக்கம் செலுத்திடவும் மறந்திடாதீர்!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments