Ticker

6/recent/ticker-posts

If you join in yoga you will lost your happiness or not?

யோகத்தில் இணைந்துவிட்டால், சந்தோசம் இருக்காது என்று யாராவது சொன்னால் உங்கள் பதில்?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 362Votes/28Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, யோகத்தில் இணைந்துவிட்டால், சந்தோசம் இருக்காது என்று யாராவது சொன்னால் உங்கள் பதில்?

இப்பொழுதான் முழுமையான சந்தோசத்தை அனுபவிக்கிறேன் 57% (சரியான / அதிக வாக்கு)

-

அன்பர்களே, யோகம் என்றால் என்ன? என்று அறியாத காலத்திற்கு நாம் தள்ளப்பட்டோம் என்பது உண்மை. ஆனாலும் எண்ணற்ற சித்தர்களின், தன்னலமற்ற சேவையும், மனதர்களின் துன்பம் நீக்கி இன்பவாழ்வு வாழ எடுத்த பல முயற்சிகளும், அதற்கு பலமாக இருந்த யோகமும், இறையருளால் மீண்டும் மீண்டும் தழைத்து வளர்ந்தது என்றால் மிகையில்லை.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! ஒவ்வொரு காலத்திலும், மனதர்கள் துன்பச்சுழலில் சிக்கி தவிக்கும் பொழுது, அவர்களை நல்வழிப்படுத்த, மகான்கள் பிறந்து வருகிறார்கள் என்பதே உண்மை. அந்த வழியில், சித்தர்களின் யோகத்தை முழுமையாக கற்று, உயர்ந்து, அதை எளிமையாக்கி, பருவம் வந்த அனைவரும் கற்றுத்தேரலாம் என்று உலகம் முழுமைக்கும் கொண்டு வந்தவர், பாமரமக்களின் தத்துவஞானி, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களே! 

உலகில் வழக்கம் பழக்கம் என்ற முறையில், தேவையில்லாத சுமைகளை தாங்கிக் கொண்டு வருந்திக் கொண்டிருந்தோம், ஆனால் வேதாத்திரியத்தில் இணைந்தபிறகு, உண்மை உணர்ந்தோம். எளியமுறை உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தவம், தற்சோதனை, அகத்தாய்வு இவற்றை கற்றோம், அதை தினமும் செய்து தன்னிலைஅறிதல் நோக்கி பயணிக்கிறோம். அவ்வழியில் எது உண்மை என்பதை ஏற்று, தேவையில்லாததை விட்டு விலகிட பழகிவிட்டோம். இப்பொழுதான், சந்தோசமாக, மகிழ்ச்சியாக, இன்பமாக இருக்கிறோம் என்பதே உண்மை, அது இனி நிறைவு, அமைதி என்ற நிலை நோக்கி நகரும் என்பதும் உறுதி.

இதையறியாமல், யோகம் என்றால் இருப்பதும் போய்விடும் என்ற பழங்கால கட்டுக்கதையை இன்னமும் நம்பி நமக்கு அறிவுரை சொல்லுபவரை என்னசெய்வது? வழக்கம்போல அவரை வாழ்த்திட வேண்டியதுதான்  சரியான வழி!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments