வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 279Votes/19Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, இன்னமும் காயகல்பம் செய்ய, உடற்பயிற்சி செய்ய, தவம் இயற்ற நேரமே இல்லை என்று புலம்புகிறிர்களா?
என்னுடைய தினத்தின் முதல் வேலையே இவைதானே 53% (சரியான / அதிக வாக்கு)
என்னுடைய தினத்தின் முதல் வேலையே இவைதானே 14% (சிறப்பு வாக்கு)
அன்பர்களே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், எளியமுறை யோகப்பயிற்சியை மனவளக்கலை வழியாக தருகிறார். அதில் மேலும் சிறப்பாக, எளியமுறை உடற்பயிற்சியும், காயகல்பமும், தவமும் கலந்தே இருக்கிறது!
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
யோகம் என்பதை, இல்லறத்தார் ஏற்கமுடியாத சூழல் நிலவிவந்த காலத்திலும், இல்லறத்தாரும் கூட யோகம் பயின்று இறை உண்மை அறியலாம், நான் யார் என்பதை தெரிந்துகொள்ளலாம். வாழும் வாழ்க்கையை சிறப்பாக, இன்பமாக அமைத்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில், உருவாக்கம் பெற்றதே ‘மனவளக்கலை’ ஆகும். அந்தக்காலத்திய கடின முறைகள் ஏதும் இன்றி, குருவின் வழியாக, அவரின் சக்தியைக் கொண்டே தீட்சை பெறும் வழியாக மலர்ந்ததே, வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை யோகம் ஆகும்.
ஒரு சாராசரி மனிதர், குருவை சரணடைந்து, ஆசி பெற்று, யோகம் கற்க முனைந்தால், தீட்சையும், ஆக்கினை தவமும், கிட்டதட்ட பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும் என்பது பொதுவான நிலையில் இருந்தது. ஆனால், மனவளக்கலையில், தன்னை இணைத்துக்கொண்ட உடனே, ஆக்கினை தீட்சை நேரடியாகவே வழங்கப்படும் அளவிற்கு அற்புதமான எளிமை அல்லவா? மேலும் தவத்தால் எழுகின்ற தவக்கனல் தீர சாந்தி தவமும் வழங்கப்படுகிறது. தவம் செய்ய தகுதியான உடலைப்பெறவும், நோய்வராது தற்காக்கவும், வந்த நோய் தீர்க்கவும் ‘எளியமுறை உடற்பயிற்சி’ வழங்கப்படுகிறது. உடல், மனம், உயிர் இணைப்பை வலுவாக்கிட ‘காயகல்ப பயிற்சியும்’ கற்றுக்கொள்கிறோம்.
ஆனால் இதையெல்லாம் நாம் வெகு சுலபமாக, செய்வதற்கு நேரமில்லை என்று ஒதுக்கிவிடுகிறோம் என்றால், அது நம் அறியாமை அல்லவா? மகத்தான, அரிய வாய்ப்பான, பிறவிக்கடனை தீர்க்கும் வாய்ப்பை தவிர்க்க நினைப்பது சரியா? இப்பிறவியில் தீர்க்கவில்லையானால், வேறு யார் நம் பிறவிக்கடனை தீர்ப்பார்? இதுவரையிலும் தீர்க்காமல் தானே, நாம் பிறந்து வந்திருக்கிறோம்? அதை அறியாமல் தவிர்க்கலாமா? உண்மை அறியாமல், காலத்தை வீண் செய்யலாமா? எனவே, நம்மை கர்மா என்ற வினைப்பதிவிலிருந்து நீக்க்கிடவும், இருக்கும் வாழ்வின் உண்மை அறிந்து, துன்பம் அகற்றி, இன்புற்று வாழவும், இயற்கையோடு இணைந்த நம் உண்மை அறியவும் முயற்சியோடு, விருப்பத்தோடு தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்று அன்பர்களாகிய உங்களை வாழ்த்துகிறேன்!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments