Ticker

6/recent/ticker-posts

Any special day or month is available for yoga marga?

ஆடி மாதம் என்பது பக்தி நிரம்பி வழியும் காலம், அதுபோல யோகத்திற்கு தகுந்த காலம் உள்ளதா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 235Votes/14Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, ஆடி மாதம் என்பது பக்தி நிரம்பி வழியும் காலம், அதுபோல யோகத்திற்கு தகுந்த காலம் உள்ளதா?

யோகத்தை பொருத்தவரை எல்லாமே சிறப்பு 82% (சரியான / அதிக வாக்கு)


அன்பர்களே, இப்பொழுது ஆடி மாதம் நிகழ்கிறது. ஆடி வெள்ளி என்ற சிறப்பை நினைக்கத்தொன்றும் விதமாக, பக்தி நிரம்பி வழியும் மாதம் இது என்றால் மிகையில்லை. பெரும்பாலான அம்மன் கோவில்களில் கூட்டம் மிகும். அரசு சார்பில் சில கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகளும் விடப்படும்.

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

தமிழகத்தின் ஓவ்வொரு ஊரிலும் சிறப்பு அம்மன் கோவில்கள் உண்டு. அந்த கோவில்களில், ஆடி மாதம் என்பது மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். உதாரணமாக திருச்சிராப்பள்ளி, சமயபுரத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோவில். எங்கிருந்தும் கோவிலுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் உண்டு. அந்த அளவிற்கு, பக்தர்கள் கூட்டம் வந்து செல்லும். பலர் வெளி ஊர்களில் இருந்தும் வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.

யோகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்களுக்கு, அந்த யோகத்தில் ஆர்வமும் இல்லாதவர்களுக்கு, பக்தி என்பது போதுமானதுதான். அதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. பொதுவாகவே ‘மாரி அம்மன்’ என்று சொல்லுவதே ‘யோக தீட்சையை’ குறிக்கிறது என்றும் சொல்லுவார்கள். நாம் அதை வேறெரு கட்டுரையில் அலசி ஆராயலாம். இந்த ஆடி மாதம் என்பது, ஓவ்வோர் குடும்பத்திலும் கூட சிறப்பாக அமையும். தமிழ் மாதமான ஆடி 18 ம் நாள், குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு, ஆடி18 ல் நினைத்து, மகிழ்ந்து போற்றி வணங்குவார்கள்.

ஆனால், யோகத்தில் இருப்பவர்களுக்கு இப்படியான சிறப்பு தமிழ் மாதம், நாள் உண்டா? என்று கேட்டால் இல்லைதான். யோகம் தனிச்சிறப்பு வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. யோகம் நமக்கு கிடைக்கும் நாளோ, யோகத்தில் நாம் இணையும் நாளோ, யோகம் குறித்து நமக்கு சொல்லப்படும் நல் அறிவுரை நாளோ தான் சிறப்பானது என்று சொல்லலாம். எப்போது கிடைத்தாலும் அது நமக்கு நன்மையே தரும். எனவே யோகத்திற்கு என்று தனியாக, சிறப்பான நாளோ, மாதமோ இல்லை என்பதுதான் முடிவாக இருக்கிறது. யோகத்திற்கு எல்லா நாளுமே சிறப்பு! அதிலும், வேதாத்திரிய மனவளக்கலை யோகம் கிடைத்தால் இன்னும் சிறப்பு! காரணம், வாழ்நாளுக்குள்ளாக, நான் யார்? என்று தன்னை அறியலாம், இறையுண்மை அறியலாம், இறையுணர்வும் பெறலாம்!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments