கர்மா எனும் வினைப்பதிவுகளை புரிந்து கொள்ள எளியவழி உண்டா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 191Votes/14Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, கர்மா எனும் வினைப்பதிவுகளை புரிந்து கொள்ள எளியவழி உண்டா?
நமக்கு நிகழும் ஓவ்வொரு விளைவையும் கவனித்தால் 66% (சரியான / அதிக வாக்கு)
அன்பர்களே, கர்மா என்றும் பிறவிக்கடன் அக்காலம் முதல் இக்காலம் வரை எல்லோரும், நம்மை பயமுறுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், கர்மா என்பது வினைப்பதிவு என்ற விளக்கத்தை தந்து, மிக எளிய வழியில், புரியவைத்துவிட்டார் என்று சொல்லலாம்.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
வேதங்களும், உபநிஷத்துக்களும், கர்மா என்பதை மூன்றாக பிரித்து 1) சஞ்சிதம் 2) பிராரப்தம் 3) ஆகாமியம் என்று சொன்னாலும் கூட, நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் இரண்டாக சொன்னார்கள், மிக எளிமையாக 1) பழவினை 2) புதுவினை என்று சொன்னார்கள். இந்த சித்தர்கள் சொன்ன அதே கருத்தை, நம் குருமகானும் ஏற்று ‘வினைப்பதிவு’ என்று நமக்கு வேதாத்திரிய மனவளக்கலை வழியாக விளக்கம் அளித்துவிட்டார்.
நம்முடைய வாழ்வில், ஒவ்வொருவருக்கும், இந்த கர்மா என்ற வினைப்பதிவு செயலாக்கம் பெற்று வெளிப்படுகிறது. இது இயற்கையாக நடப்பதுதான். இருந்தது வெளியே வருகிறது என்பதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும். அதாவது, நாம் இந்த பிறவியின் வழியாக, கருத்தொடராக பெற்ற கர்மா என்ற வினைப்பதிவும், நாம் வாழ்கின்ற காலத்தில் பெற்றுக்கொள்கிற கர்மா என்ற வினைப்பதிவும் என்பதாகிறது.
இதிலிருந்து விடுபட்டு, களங்கமில்லா நிலைபெறவே யோகம் வந்தது, யோகத்தை புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு பக்தி வந்தது. ஆனால் தற்கால, பொருள்முதல்வாத உலகம், இந்த இரண்டையும் தள்ளிவைத்துவிட்டது. ஒரு தனி மனிதர், தனக்கு இருக்கும், கர்மா என்ற வினைப்பதிவை புரிந்து கொள்ள வழி உண்டா? என்பதுதான் இங்கே கேட்கப்பட்டு உள்ளது. இதற்கான சரியான விடை, ‘நமக்கு நிகழும் ஓவ்வொரு விளைவையும் கவனித்தால்' என்பதுதான். எப்படி? என கேட்டால்...
ஒரு தனி மனிதருடைய 1) எண்ணம் 2) சொல் 3) செயல் ஆகிய மூன்றும் கர்மா என்ற வினைப்பதிவால் எழுகிறது என்று சொல்லமுடியும். இதைக்கொண்டுதானே நாம், நம்முடைய வாழ்வில் செயல்பட முடியும்? இந்த செயலில் இறங்கினால், அதன் விளைவை நாம் தீர்மானிக்க முடியுமா? மிக கடினமே. ஏதோ ஒரு அளவில் கொஞ்சம் தீர்மானித்தாலும், முழுமை செய்திட முடியாதே! அந்த விளைவின் வழியாக, இது நமது கர்மா என்ற வினைப்பதிவின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும் என்பதே உண்மை!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments