தினமும் வேதாத்திரிய விளக்கங்களை பெறுவது எப்படி உதவுகிறது? என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள்?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 210Votes/15Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, தினமும் வேதாத்திரிய விளக்கங்களை பெறுவது எப்படி உதவுகிறது? என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள்?
தினமும் மனதின் அறிவின் ஆராய்ச்சி தன்மை கூடுகிறது 50% (சரியான / அதிக வாக்கு)
அன்பர்களே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வேதாத்திரியத்தை எல்லா வழிகளிலும் நாம் பெற்றுவருகிறோம். நேரடியாக, மனவளக்கலை மன்றத்தில்தான் விளக்கங்களை பெற வாய்ப்பு உண்டு என்பது மாறிவிட்டது.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
இணையம் எல்லோரிடமும் கைகளில் தவழந்து வருவதால், யார் எங்குவேண்டுமானாலும் இருந்தபடியே, வேதாத்திரிய உண்மைகளை பெற்றுக்கொள்ள முடிகிறது. அதை தலைமை மன்றமும், பிற மையங்களும், தவ மையங்களும் செய்துவருகின்றன. அதுபோலவே உண்மையறிந்த ஆசிரியர்களும், ஆர்வலர்களும் இச்சேவையை செய்துவருகின்றனர். இது உண்மையிலேயே எல்லோருக்கும் கிடைத்த நல்வாய்ப்பு எனலாம்.
ஆனாலும், வேதாத்திரிய அன்பர்களின் ஆர்வத்தை பயன்படுத்தி, தவறான தகவல்களை சொல்லுபவர்களும், வேதாத்திரியத்திற்கு சற்றும் பொருத்தமில்லா செய்திகளையும் கலந்தும் தருகிறார்கள். வேதாத்திரியத்தின் உண்மைகளை விளக்கிச் சொல்வதற்கு பதிலாக, இன்னும் குழப்பி தருபவர்களும் உண்டு. அதை கடினமாக்கி தருபவர்களும் உண்டு. முற்றிலும் வேறாக தருபவர்களும் உண்டு. உண்மையறிந்த வேதாத்திரிய அன்பர்கள், மிக எளிதில் இந்த தவறுகளை கண்டுகொண்டு, அவர்களை விலக்கிவிடலாம்.
பெரும்பாலான வகையில், மிகச்சரியான வேதாத்திரிய உண்மை விளக்கங்களை நாம் தினமும் பெறுகிறோம். அதன் வழியாக மனதின் அறிவின் ஆராய்ச்சி தன்மை கூடுகிறது என்பது மிகச்சரியானது. ஏனென்றால், ஒரு உண்மையை அடிக்கடி கேட்டு, அலசி, ஆராய்ந்தால், ஓவ்வொரு முறையும், அந்த புரிதல் வளர்ந்து கொண்டே வரும். இதை மகான் திருவள்ளுவர், ‘வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.’ என்று குறளாக சொல்லி இருக்கிறார். அதுப்போல உள்ளம் புரிந்துகொள்ள, புரிந்துகொள்ள அந்த உண்மையும் உயர்வாகிறது.
எனவே, வேதாத்திரிய உண்மைகளை, விளக்கங்களை தினமும் தேடிப்பெறுவது மட்டுமில்லாமல், மிகச்சரியான பகிர்வுகளா என்பதையும் கண்டு, பெற்றுக்கொள்ள உங்களை வாழ்த்துகிறேன்!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments