உங்கள் வாழ்க்கைத்துணைவரை தேர்ந்தெடுப்பதில் முக்கியபங்கு வகிப்பது யார்?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 325Votes/18Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, உங்கள் வாழ்க்கைத்துணைவரை தேர்ந்தெடுப்பதில் முக்கியபங்கு வகிப்பது யார்?
என் பெற்றோர்கள்தான் முடிவு செய்தார்கள் 69% (அதிக வாக்கு)
நானேதான் அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேன் 21% (சிறப்பு வாக்கு)
அன்பர்களே, நாம் வாழும் இந்த உலகம், அதன் சமூக அமைப்பு, ஆண், பெண் துணையாகக் கொண்டு வாழ்வதை ஏற்று, வருங்கால சந்ததியினருக்கான பாதையை அமைக்கிறது. இந்தியநாடு, பல்லாண்டு காலமாக இதற்கு முக்கியத்துவம் கொடுத்துவருவதை அறியலாம். மேலை நாடுகளில், இன்னமும் அப்படியான முக்கியத்துவம் இருப்பதை காணலாம். ஆனாலும், நீண்ட காலம் இணைந்துவாழ்வது என்ற நிலை, அங்கே கட்டாயமில்லை என்று மாறிவிட்டது. மேலும் ஒரு குடும்பம் என்ற அமைப்புக்கூட சிதறிவிட்டது என்றும் சொல்லலாம்.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
ஒருவருக்கு ஒருவர் துணை என்ற வகையிலும், உடல், மன, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், தங்களுக்குள் வாழ்க்கை அமைத்து, ஒருவருக்கு ஒருவர் உதவி, தன்னை மேம்படுத்திக்கொண்டு, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்க்கவும், அந்த களங்கம் போக்கிய நிலையில், வருங்கால சந்ததியினரை பெற்று, வளர்த்து ஆளாக்கி, உலகின் நலன் காக்கவும், திருமணம் என்ற அமைப்பு முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. பருவ வயதில் ஏற்படும், இயற்கை உந்துதலை முறைப்படி சமப்படுத்திக் கொள்ளவும், திருமணம் என்ற பந்தம் உதவுகிறது.
தனிநபராக வாழும் ஆண், பெண் ஆகியோரை, திருமணம் என்பது கட்டாயம் என்று இந்த சமூகம் சொல்லுவதில்லை. அவரவர் விருப்பம் என்பதை அனுமதிக்கிறது. தற்போதைய பொருள்முதல்வாத உலகில், வேலை, பணம் சம்பாதித்தல், குடும்ப சுமைகள் ஆகியவற்றால் பருவ வயது கடந்தும், திருமணம் என்ற பந்தத்தில் இணையாமல், காத்திருக்கும் ஆணும், பெண்ணும் பலர் உண்டு. நிச்சயமாக காலம் அவர்களுக்கான வாய்ப்பை அமைத்துத்தரும். காரணம், ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ள கர்மா என்ற வினைப்பதிவின் தாக்கம், அந்த பந்தத்தை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை. ஆதிகாலம் முதற்கொண்டே, ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து வந்த, தொடர் நிகழ்வுகள், இன்றும் இயற்கையாக தொடர்கிறது, அதில் கர்மா என்ற வினைப்பதிவு களங்கங்களை போக்குவதும் தொடர்கிறது.
சிலருக்கு தானாகவே, துணையைத் தேடிக்கொள்ளும் வாய்ப்பை காலம் அமைத்துத் தருகிறது. சிலருக்கு பெற்றோர் மூலமாகவும், சிலருக்கு உற்றார் உறவினர்கள் மூலமாகவும், சிலருக்கு நண்பர்கள் மூலமாகவும், இன்னும் சிலருக்கு முகமறியாத தீடீர் மனிதர்கள் மூலமாகவும் அமைகிறது. எப்படி அமைந்தாலும், அதில் இருக்கக்கூடிய உண்மை ‘கர்மா’. இதை ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் ஆனால் அதுதான் ரகசிய உண்மை. இதை அனுபவத்தால் உணர் முடியும்.
உங்களின் வாழ்க்கைத்துணையோடு கூடிய இல்லற வாழ்வை, உற்றுக் கவனித்து, ஆராய்ந்து பாருங்கள். அங்கே நிகழ்ந்த, நிகழும், நிகழக்கூடிய அனைத்தும், உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும், பதிவின் திருத்தமாகவும் இருக்கும், புதிய பதிவாகவும் இருக்கும். மேலும் இவ்விளக்கம் தேவைப்படுவோர், நம் வேதாத்திரிய யோகவழி காணொளி இணையத்தில் இணைந்திருங்கள்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Paytm: 9442783450@paytm
Present by:
0 Comments