Ticker

6/recent/ticker-posts

What is your experience on your dreams?

வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 325Votes/18Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)


கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, கனவுகள் குறித்த உங்கள் அனுபவம் கருத்து என்ன?

அது மனதின் கற்பனை, அதுதான் காட்சியாக மலர்கின்றது 67% (சரியான / அதிக வாக்கு)

அன்பர்களே, கனவு காணுங்கள் என்று இந்த உலகில் இரண்டு விதமாக சொல்லி வளர்ப்பார்கள். ஒன்று நமக்கு செயல் ஊக்கம் கொடுப்பதற்காக சொல்லுவார்கள். இன்னொன்று, இப்படியெல்லாம், நிஜத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்காதே என்பதற்காக சொல்லுவார்கள்.

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

கனவு என்றொரு நிகழ்வு, மனிதனுக்கு மட்டுமல்ல. சில விலங்கினங்களும், பறவைகளும் தூங்கும் பொழுது கனவு காண்கின்றன என்று அவற்றின், மூளையின் அலை இயக்க செயல்பாடுகளை ஆராய்ந்து, விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். ஆனால் மனிதனுக்கோ பகல் கனவும் உண்டு. தானாக எதையாவது நினைத்து, அதன்வழியாக தொடர்ந்து பயணிக்கும் கனவுப்பயணி நம்மோடும் இருக்கிறார்கள்.

முக்கியமாக கனவு, நம்முடைய தூக்கத்தில் வருகிறது அல்லது எழுகிறது என்பதே உண்மை. அதாவது மனம் தன்னுடைய இயல்பான, தினசரி நடவடிக்கைகளை குறைத்து, உறங்கக்கூடிய நிலையில் என்று சொல்லலாம். மனதின் அலை நீளம் கணக்குப்படி, நொடிக்கு 13 / அதற்கு கீழ் இறங்கக்கூடிய மன அலைச்சுழலான ஆல்ஃபா அலை நீளத்தில் என்று அறிந்துகொள்ளலாம்.

பெரும்லான மக்களுக்கு கனவுத்தொல்லை உண்டு. கனவுகள் வருவதே இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. மிகச்சிலருக்கு, ஏதேனும் ஒரு நிலையில், காலத்தில், கனவுகள் சிறிதளவாவது வரும். அதை அவர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளமுடியாமலும் இருக்கலாம். இந்த கனவுகள் எப்படி எழுகின்றன? என்றால், இயல்பாக, மனதோடு நட்பு பாராட்டும், மனதோடு முரண்படாத நிலையில் இயங்கும் மனிதர்களுக்கு கனவுகள் வருவது மிகக்குறைவு. வந்தாலும் அது அவர்களை, நிஜ உலகில் பாதிப்பதில்லை.

அதிகமாக படபடப்பு உள்ளோர், எதையும் சரியாக செய்யவேண்டுமே என்று பதறுவோர், உண்மைக்கு புறம்பாக வாழ்வோர், பிறர் அறியாமல் மறைத்து, பேசுவோர், செயல்புரிவோர், இயற்கைக்கு முரணாக இயங்குவோர், தனக்கும் பிறருக்கும், சமூகத்திற்கும் தவறு விளைவித்துக் கொள்வோர் இப்படிபலருக்கு, மனம், தன் அமைதியை இழந்து, தூக்கத்தில் விழிப்புக் கொண்டு இயங்கும். தன்னுடைய பதிவுகளை தானே எடுத்து மூளைக்கு அனுப்பும். அங்கே மூளை அதை காட்சியாக நமக்கு வழங்கும். அதுதான் கனவாக நாம் அறிகிறோம். அதில் ஏற்கனவே நடந்ததும் இருக்கும், புதிதாகவும் நிகழும் அது எதுவுமே கணக்கில் அடங்குவதில்லை.

குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்வதுபோல, உணவு, உடலுழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்தில் எதனுடைய அளவு மீறினாலும், அதன்வழியாக உடல், மனம், உயிர் பாதிப்படைகிறது. அந்த பாதிப்பின் அறிகுறி கனவாக மலர்கிறது. எந்தக்கனவும் நமக்கு உதவுகிறதா? என்றால் இல்லவே இல்லை. அதுஒரு இயற்கை வெளிப்பாடு, அவ்வளவுதான். திருத்தமான, தெளிவான, இயல்பான, அமைதியான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளுங்கள். கனவுத்தொல்லை இருக்காது.

இதுகுறித்து இன்னும் அடுத்தடுத்த கட்டுரைகளில் காணலாம். காத்திருங்கள்!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Paytm: 9442783450@paytm

Present by:

Post a Comment

0 Comments