Ticker

    Loading......

What happen if we stop the meditation suddenly?

தவம் செய்யும் பொழுது தடை வந்து எழுந்துவிட்டால் தவறா? சரியா? என்ன ஆகும்?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 277Votes/20Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, தவம் செய்யும் பொழுது தடை வந்து எழுந்துவிட்டால் தவறா? சரியா? என்ன ஆகும்?

தவறுதான், அப்படி எழுவது மன அமைதியை கெடுக்கும் 4%(சரியான  வாக்கு)

ஒன்றும் பிரச்சனை இல்லை, மறுபடி பிறகு தவம் செய்யலாம் 75% (அதிக வாக்கு)

தவம் என்றால் முழுமையாக செய்யவேண்டும் அதுதான் சரி 6% (சிறப்பு வாக்கு)

ஒருநாள் என்றால் பிரச்சனையில்லை தினமும் என்றால் தவறு 13% (சிறப்பு வாக்கு)


அன்பர்களே, யோகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிற யாவரும், தவம், தியானம் என்பதை மிக கவனமாக, அதற்குரிய வழிமுறைகளோடும், அளவுகளோடும் செய்யவேண்டியது அவசியமாகும். இங்கே, நாம் நினைத்தபடி மாற்றிக் கொள்வதும், தேவைப்பட்ட வகையில் நிகழ்த்திக் கொள்வதும், இடைபட்ட நேரத்தில், தானாகவோ தடையாகவோ எழுந்துவிடுவது தவறு ஆகும். 

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய, மனவளக்கலை வழியாக, எளியமுறை குண்டலினி யோகம் கற்றுவருகிறோம். இதில் கூட்டுத்தவமும், தனியான தவமும் செய்து, தன்னிலை விளக்கம் பெற முயற்சிக்கிறோம். நாம் தனியாக, வீட்டில் தவம் செய்யமுடியும். அதற்கான வழிமுறையும் நாம் கற்றுவிடுகிறோம். ஒவ்வொரு தவம் / தியானத்திற்கும் ஒரு கால நேர அளவு உண்டு. அதை எப்போதும் மீறுவது சரியல்ல. ஏனென்றால், தவத்திற்காகத்தான் நாம் தவிர, நமக்காக தவம் இல்லை. தவம் / தியானம் என்பது அதிக நுட்பங்களை தன்னுள்ளே வைத்திருக்கும் ஒரு மனப்பயிற்சி. அதில் விளையாட்டுத்தனமும், அக்கறையின்மையும் இருக்கக்கூடாது.

நாம் வாழும் சூழ்நிலை காரணமாக, வீட்டில் தனியாக தவம் / தியானம் செய்யும் பொழுது அதில் தடை எழ வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. இதற்கு, முன்பாகவே தனி இடம் தேவை அல்லது வீட்டாரிடம், இந்த பயிற்சி முடியும் வரை தொந்தரவு செய்யவேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும். அறைக்குள் இருந்தால், தாளிட்டுக் கொள்வதும் நல்லதே!

அப்படியிருந்தும் கூட பிரச்சனை, தடை என்றால், தவம் / தியானத்தில் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அந்த நிலையில் இருந்து, உடனடியாக அப்படியே எழுந்துவிடக்கூடாது. அது உங்கள் உடல், மனம், உயிர் இணைப்பை பாதிக்கும். குண்டலினி சக்தி தன்னுடைய பாதையில் ஏதேனும் ஒரு ஆதார மையத்தில் தேங்கிவிடவும், சிக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இதனால், உடலில் உபாதைகள் உண்டாகலாம். மனம் தன் உற்சாகம் இழந்து, அமைதியை கெடுத்துக்கொண்டு பிரச்சனையில் சிக்கலாம். வெளிப்படையாக தெரியாவிட்டாலும் கொஞ்சம், கொஞ்சமாக ஏதேனும் சிக்கல் உருவாகலாம்.

ஒரு தவம் / தியானம் செய்ய நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றிச்செய்கிறோமோ அவ்வளவு நுணுகிய நிலையில் இருந்து, உடனடியாக, தடாலடியாக எழுவது என்பது கொடுமையான ஒன்றே. இனி அப்படி செய்யாதீர்கள். முடிந்த அளவிற்கு எப்படி அந்த தவத்தை முடிக்க உங்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதன்படி முடித்துவிட்டுத்தான் எழுவேன் என்று உறுதி செய்து கொள்ளுங்கள். எப்போதும், யாருக்காகவும், எதனாலும் அதை மாற்றாதீர்கள்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

Post a Comment

0 Comments